வேலூர் மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு அரசு சலுகைகளை வழங்காமல் அலைகழிக்கும் பிஆர்ஓ, ஏபிஆர்ஓ!
வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ளது. தற்போது மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக சுகுமார் மற்றும் உதவி செய்தி மக்கள் தொடர்புதுறை அலுவலராக நந்தகுமார் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வேலூர் மாவட்டத்திலுள்ள செய்தியாளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவதற்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள அரசு அலுவலர்கள் ஆவார்கள். ஆனால் செய்தியாளர்களுக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்கள் செய்தியாளர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து தராததோடு, அரசு வழங்கும் சலுகைகளை கூட செய்து தராமல்பெற்று தராமல் இழுத்தடித்து, அலை கழித்து வருகின்றது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது. இவர்களுக்கு (செய்தி மக்கள் தொடர்புதுறை அலுவலர்கள்) அளவில்லாத அதிகாரம் உள்ளதா ?என்பதும் தெரியவில்லை. அப்படி அதிகாரம் கொடுத்தவர்கள் யார்? என்பதும் இதுநாள் வரை தெரியவில்லை. ஒரு செய்தியாளர் தனது நிறுவனத்திலிருந்து கடிதம் வாங்கி வந்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலரிடம், தான் வேலூர் மாவட்ட நிருபராக நியமனம் செய்யப்பட்டுள்ளேன்) தனக்கு வேண்டிய சலுகைகள் அனைத்தையும் பெற்றுக் கொடுக்குமாறு குறிப்பிட்டு இந்த கடிதம் தரப்படுகிறது. அப்படி கடிதத்தை கொண்டு செல்லும் செய்தியாளரிடம் இந்த கடிதத்தை வாங்காமல் ஏ பி ஆர்ஓவிடம் கொடுங்கள். உள்ளே உள்ள ரெக்கார்டு கிளார்க் சுப்பிரமணியிடம் கொடுங்கள் என்று மாறி மாறி கூறுகின்றனர். சுப்பிரமணியிடம் சென்று கொடுத்தால் பிஆர்ஓவிடம் கொடுங்கள் என்று சொல்கிறார். ஏ.பி.ஆர்.ஓவிடம் சென்று கொடுத்தால் பிஆர்ஓவிடம் கொடுங்கள் என்று சொல்கிறார். இப்படி மூவரும் திரிசங்கு சொர்க்கம் போல செய்தியாளர்களை அலைகழிக்கும் வேலையை கணகச்சிதமாக செய்கின்றனர். இதனால் பல செய்தியாளர்களுக்கும், புகைப்படக்காரர்களுக்கும் தமிழக அரசு வழங்கும் இலவச பேருந்து பயண அட்டை இந்த ஆண்டு கிடைக்காமல் போய்விட்டது. எப்படி அரசு வழங்கும் இலவச பேருந்து பயண அட்டை கிடைக்காமல் செய்ததில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு என்ன லாபம் கிடைத்துவிட்டது என்று தெரியவில்லை. இதற்கு அடுத்தாற் போல் மிகவும் அற்பமான செய்தியாளர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிரஸ் ஸ்டிக்கர் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் ஒட்டி செல்ல அரசு வழங்கும் ஒரு சாதாரண ஸ்டிக்கர் கூட வழங்காமல் அதற்கு கூட இழுத்தடிப்பு செய்து வருகின்றனர் இந்த மனம் இல்லாத பிஆர்ஓ, ஏ பி ஆர் ஓ அத்துடன் முடிந்து விடவில்லை. இவருக்கு ஒத்து ஊதுகிறார் ரெக்கார்டு கிளார்க் சுப்பிரமணியன். இவருடைய மைத்துனர் தரணி என்பவர் இவருக்கு ஒரு கைத்தடியாக செயல்படுகிறார். இப்படி மாமன், மச்சான் என்று கைகோர்த்துக் கொண்டு ஒரே அலுவலகத்தில் பணி புரிவது யாருக்கும் தெரியாமல் போனதா ?இல்லை தெரிந்தும் தெரியாமல் இருப்பது போல நடிக்கின்றாரா? என்பது தெரியவில்லை. ஏனென்றால் உலகமே ஒரு நாடக மேடை என்று சொல்வார்கள். அதில் வேலூர் மாவட்ட பிஆர்ஓ அலுவலகத்தில் உள்ளவர்கள் அருமையாக நடிக்கிறார்கள். செய்தியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகள் நல வாரிய உறுப்பினர் படிவம் என்று ஆரம்பத்திலேயே அனைத்தையும் கொடுக்காமல் இருட்டடிப்பு செய்து வருகின்றனர். எந்த ஒரு தகவலையும் செய்தியாளர்களுக்கு முறைப்படி தெரிவிப்பதே கிடையாது. செய்தியாளர்களுக்கு என்று பிஆர்ஓ அலுவலகத்தில் செயல்படுத்தப்படும் ஒரு குழுவில் தனது செல்போன் நம்பரை இணைப்பதற்கு பல செய்தியாளர்கள் இன்றும் நாயாக, பேயாக அலைந்து வருகின்றதே மிகவும் கேவலமாக, அற்பமான ஒரு நிகழ்ச்சியாக தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. செய்தியாளர்களின் பெயர்களை செய்தியாளர்களின் செல்போன் எண்களை இணைத்துக் கொள்வதில் இவருக்கு என்ன நஷ்டம் என்று தெரியவில்லை. பி.ஆர்.ஓக்கள் என்றால் செய்தியாளர்களுக்கு பணிபுரிய அரசால் அமர்த்தப்பட்ட ஒரு நபர் என்பதை ஏனோ மறந்துவிட்டு இவர் ஏதோ செய்தியாளர்களுக்கு பிச்சை போடுவது போல நினைத்துக் கொண்டு அவர்களிடம் எதிரிகளை பார்ப்பது போல பார்த்து அங்கு செல் இங்கு செல் என்று சொல்வது எவ்வகையில் மனிதாபிமான ஒரு செயல் என்று தெரியவில்லை .அரசும் செய்தியாளர்கள் எப்படி போனால் நமக்கென்ன என்ற ரீதியில் கண்டும் காணாமல் விட்டுவிட்டதன் விளைவு இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடப்பதற்கு அடித்தளமாக அமைந்து விடுகின்றன. மாவட்ட ஆட்சியராக உள்ளவர்களும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் என்னென்ன கூத்துகள் அரங்கேறுகின்றன. செய்தியாளர்களுக்கு தேவையான வசதிகளை இந்த அலுவலகம் மூலம் செய்து தரப்படுகிறது என்பதை ஒருநாள் கூட கேட்டதும் கிடையாது ஆய்வு செய்ததும் கிடையாது என்பது இதற்கு மேலும் வலுவூட்டும் வகையில் அமைந்துள்ளது என்பதற்கு இதை விட வேறு ஒரு உதாரணம் தேவை இல்லை என்றே சொல்லலாம். இதையும் மீறி தட்டி கேட்டால் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனும், பிஆர்ஓ சுகுமாரும் ஒரே இடத்தில் பணியாற்றியவர்கள் என்பதால் நாங்கள் நண்பர்கள் என்னை மாவட்ட ஆட்சியர் ஒன்றும் செய்ய இயலாது என்று மார்தட்டுகிறார் இந்த ஜெகதல பிரதாபன் சுகுமார். இப்படி நிலைமை ஓடிக்கொண்டிருப்பது யாருக்காவது தெரியுமா? தெரியாதா ?என்று தெரியவில்லை. சென்னையில் உள்ள அரசு தலைமைச் செயலகத்தில் செயல்படும் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர், இணை இயக்குநர் ஆகியோருக்கும் இது தெரியுமா? தெரியாதா ?.இதற்கு மேலே ஒரு படி சென்று செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதனுக்கு வேலூர் மாவட்டத்தில் நடக்கும் கூத்துகள், செய்தியாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், துரோகங்கள் குறித்த தகவல்கள் ஏதாவது இதுநாள் வரை தெரிந்ததுண்டா என்றால் அதுவும் இல்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் நிலைமை அவ்வளவு மோசமாக நாளுக்கு நாள் சென்று கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வேலூர் என்றாலே விளங்காது போகும் நிலைக்கு தள்ளப்படுவது ஏன் என்று தெரியவில்லை. தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் ஒரு பிரிவினரை வைத்துக்கொண்டு பலரை ஓரங்கட்டி ,ஒதுக்கி வைத்து, ஒடுக்கப்பட்டவர்களாக புறந்தள்ள பட்டவர்களாக பிரிப்பதற்கு பிஆர்ஓவுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்பது இதுநாள் வரை தெரியவில்லை. பிஆர்ஓ என்பவர் யார்?. அவரது பணி என்ன? என்பதை புரிந்து கொண்டு நடந்து கொண்டால் நலம் பயக்கும் .இல்லையேல் வேலூர் மாவட்டம் ஏற்கெனவே புரட்சிக்கு பெயர் பெற்றது. அதாவது சிப்பாய் புரட்சி, மீண்டும் செய்தியாளர்கள் புரட்சிக்கு வித்திட காரணமாக பிஆர்ஓ ,ஏபிஆர்ஓ அமைந்து விடுவார்களா என்பது விடை தெரியாத ஒன்றாக உள்ளது .அத்துடன் தினமும் பத்திரிகைகளை பி ஆர்ஓ அலுவலகத்தில் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து சலுகைகளும் கிடைக்கும். அப்போதுதான் அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது .ஆனால் பல பத்திரிகைகள் pdf மட்டுமே வருகின்றன .அவற்றை வைத்துக்கொண்டு பத்திரிகைகள் வந்தது போல ஒரு வருகை பதிவேடு போட்டுக்கொண்டு அதில் டிக் அடித்து விட்டு அந்த பத்திரிகையின் செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்களை சந்தித்து வாராவாரம் குவார்ட்டர், மாதத்திற்கு ரூபாய் 1000 கட்டிங் வாங்கிக் கொண்டு தில்லாலங்கடி வேலையில் ஈடுபடுகிறார் அலுவலக உதவியாளர் தரணி. இப்படியாக இந்த அலுவலகம் நடைமுறைபடுத்தி வைத்துக்கொண்டு தான்தோன்றித் தனமாக நடந்து கொண்டு உள்ளது. இதை யாராவது மறுக்க முடியுமா? மறக்க முடியுமா ?என்பது தெரியவில்லை .அத்துடன் நிறுத்தப்படவில்லை .குறிப்பாக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி பணியிலிருந்து ஓய்வு பெற்று மாத ஓய்வூதியம் பெரும் ஒரு சிலருக்கும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டு இருக்கும் ஒரு சிலருக்கு தொலைக்காட்சியின் கேமராமேன் என்று சொல்லி அவர்களுக்கும் இலவச பயண பேருந்து அட்டைகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஒட்டப்படும் பிரஸ் ஸ்டிக்கர்கள் வழங்கி அழகு பார்க்கின்றனர் இந்த பிஆர்ஓ அலுவலகத்தில் உள்ள நேர்மை மிகு, திறமைமிகு தில்லாலங்கடி ஊழியர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. வெளியில் பத்திரிகையாளர்களின் ஸ்டிக்கர்களை பார்த்து பொதுமக்கள் சிரிப்பாய் சிரிக்கின்ற அளவிற்கு நிலைமை படு மோசமாக சென்று கொண்டுள்ளது. உண்மையாக உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஏன் அண்மையில் வழங்கப்பட்ட உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டிய நல வாரிய அட்டைகள் கூட இதுபோன்ற அள்ளக்கைகள் நொள்ள கைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் தடுத்து நிறுத்தப்படுமா?. இவையெல்லாம் மீண்டும் பறிக்கப்படுமா முறைப்படுத்தப்படுமா? என்பதை மாவட்ட நிர்வாகமும், சென்னையில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் அலுவலகமும் முடிவு செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் செய்தித்துறை அமைச்சர் முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்பதே வேலூரில் உள்ள உழைக்கும் பத்திரிகையாளர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த புகார்கள் மேல் நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது கண்டும் காணாமல் விட்டுவிடுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.