ஒரு புலப்பட நகலுக்கு ரூ.300 வீதம் இரண்டுக்கும் ரூ.600 லஞ்சம் தர வேண்டும் என சர்வேயர் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத பூபாலன் தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். போலீஸாரின் வழிகாட்டுதல்படி கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி நகராட்சி அலுவலகத்தில் நில அளவையர் சுப்பிரமணியத்துக்கு பூபாலன் ரூ.600- லஞ்சமாகக் கொடுத்துள்ளார்.
அப்போது மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் சர்வேயர் சுப்பிரமணியத்தை கைது செய்தனர். இந்த வழக்கு தருமபுரி மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சுப்பிரமணியத்துக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுரேஷ் (ஜூலை 20) அன்று தீர்ப்பளித்தார்.