கோவை: நகராட்சி ஒன்றில். தூய்மை பணியாளர்கள் 5 நாட்கள் பணிக்கு வராததால் வீடு வீடாக சென்று குப்பை குப்பையை சேகரித்த கவுன்சிலர்?
மேட்டுப்பாளையம் நகராட்சியில் 5 நாட்களாக குப்பைகளை எடுக்க தூய்மை பணியாளர்கள் பணிக்கு வராத நிலையில், தி.மு.க நகர செயலாளரின் மனைவியும், நகராட்சி உறுப்பினருமான ஜம்ரூத்பேகம் தனது மகன்களுடன் சேர்ந்து குப்பை அள்ளிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதற்கு தலைவராக மெஹரீபாபர்வீன், துணைத் தலைவராக அருள் வடிவு ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், நகராட்சிக்குட்பட்ட 11 வது வார்டில் தி.மு.க நகர செயலாளர் முகமதுயூனஸ் மனைவி ஜம்ரூத் பேகம் வார்டு உறுப்பினராக உள்ளார்.

இவரது வார்டில் கழிவு நீர் கால்வாய் சீரமைத்தல், குடியிருப்புகளில் குப்பைகளை சேகரித்தல், குடிநீர் விநியோகம் முறையாக வழங்குதல் உள்ளிட்ட பணிகளை செய்து தரக் கோரி நகராட்சி நிர்வாகத்திடம் வார்டு உறுப்பினர் ஜம்ரூத்பேகம் பலமுறை வலியுறுத்தியுள்ளார். ஆனால் நகராட்சி தலைவர் இதற்கு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.


இதனிடையே இவரது வார்டில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக குப்பைகளை சேகரிக்க தூய்மை பணியாளர்கள் வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, வார்டு பகுதியில் உள்ள மக்கள் இவரது வீட்டிற்கு சென்று இவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜம்ரூத் பேகம் மற்றும் இவரது மகன்கள் ஆகியோர் சேர்ந்து வார்டு பகுதியில் தேங்கியிருந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே ஒரு வார்டு உறுப்பினர் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை எடுக்காததால் தனது மகன்களுடன் சேர்ந்து குப்பைகளை எடுத்ததை பார்த்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் நகர தி.மு.க கவுன்சிலர் ஜம்ரூத்பேகம் தனது மகன்களுடன் சேர்ந்து குப்பை அள்ளிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது!