வேலூர் மாநகராட்சி 3வது மண்டலத் தெருக்களில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் பைகளை உண்ணும் மாடுகளும்.! தூய்மை பணியாளர்கள் வராமல் வந்தது போல் கையாடல் செய்யும் சுகாதார அலுவலர் பாலமுருகனும்., மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை பாயுமா?
வேலூர் மாநகராட்சியில் வார்டு குழு பணி என்ன? விபரம் தெரியாமல் மக்கள் குழப்பம். சாலையில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் பைகளை உண்ணும் மாடுகளும்.! தூய்மை பணியாளர்கள் வராமல் வந்தது போல் கையாடல் செய்யும் சுகாதார அலுவலர் பாலமுருகனும்? மாநகராட்சி ஆணையாளரின் நடவடிக்கை பாயுமா?
வேலூர் மாநகராட்சியில் அமைக்கப்பட வார்டுக் குழுக்களின் மக்கள் நல பணிகள் செயல்பாடு குறித்து கவுன்சிலர்கள், பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில் தெளிவாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பதாகைகள் வைக்க வேண்டும். சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது. தமிழ்நாடு மாநிலத்தின் மாவட்டமான வேலூர், மாநகராட்சி அமைப்பாக, 1866 இல் உருவாக்கப்பட்ட நகர மேம்பாட்டு சட்டம் 1865, இன்படி, ஆகஸ்டு, 01,2008 முதல், வேலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதில் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு காட்பாடி 1வது மண்டலம், சத்துவாச்சாரி 2வது மண்டலம், வேலூர் கிழக்கு 3வது மண்டலம், வேலூர் மேற்கு 4வது மண்டலம் இந்த மண்டலங்களின் மொத்தம் என 60 வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் மூலம் கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டு. மொத்தம் 60 வார்டுகள் குழுவுக்கு அதன் ஆளுகைக்கு உட்பட்ட வார்டு கவுன்சிலர் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். குறிப்பிட்ட தொகைக்கு உட்பட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள, வார்டு குழுவுக்கு அதிகாரம் உண்டு. மாநகராட்சியின் பணிச்சுமையை குறைப்பதிலும், மக்கள் நலத்திட்டங்களை எளிதில் நிறைவேற்றுவதிலும் வார்டு குழு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த 60 வார்டுகள் அடங்குகின்றன. வார்டுக்குழு முறைக்கு மாநகராட்சி மாறுவது குறித்த முழுமையான விபரம், இன்னமும் பல கவுன்சிலர்களுக்கு தெரியவில்லை. பொதுமக்களுக்கு தெரியும் வகையில் அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, வார்டுக்குழுவின் அடிப்படை பணிகள், அதிகாரம், எந்தெந்த பணிகளுக்கு அவற்றை அணுகலாம் போன்ற பல்வேறு விபரங்களை கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு பதாகைகள் வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வேலூர் மாநகராட்சி 3வது மண்டலத்திற்கு உட்பட்ட சாலை, தெருக்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பைகளை உண்ணும் மாடுகளும், தூய்மை பணியாளர்கள் வராமல் மாதம். மாதம் பணிக்கு வந்தது போல் தூய்மை பணியாளர்களின் மாத சம்பளத்தை கையாடல் செய்து ஆட்டையை போடுவதும், பிறப்பு - இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கும், பதிவு இல்லா சான்றிதழ் வழங்க பயனாளிகள் அரசாங்கத்துக்கு முறையாக பணம் செலுத்தியும் கூட மனுவில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக கூறி மனுதாரர்களிடம் ஒரு பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டு சான்றிதழ்களை வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. மாநகராட்சி 3வது மண்டலத்தில் பணிபுரியும் சுகாதார அலுவலர் பாலமுருகனும்., சுகாதார ஆய்வாளர் கடலூர் சிவக்குமாரும். இவர்களை வேலூர் மாநகராட்சி ஆணையாளர் ரத்தினசாமி ஐஏஎஸ் அவர்கள், இவர்கள் இருவருடைய அறைகளில் திடீரென ஆய்வு செய்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள இருவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாநகராட்சி 3வது மண்டலத்திற்கு உட்பட்டது சாய்நாதபுரம் 50வது வார்டு, சங்கரபாளையம் 52வது வார்டு, பாகாயம் 57வது வார்டு, வேலப்பாடி 45வது வார்டு, கொசப்பேட்டை 39வது வார்டுகள் ஆகிய பகுதிகளின் தெருக்களில் அங்கங்கே குப்பை கொட்டப்பட்ட நிலையிலும் அந்த குப்பையை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காலை நேரங்களில் வந்து வீடுகளில் குப்பைகளை சரிவாரியாக சேகரிப்பது கிடையாது. சாலை, தெருக்களில் கிடக்கும் குப்பைகளை அகற்றுவதும் கிடையாது என்ற நிலைமை உருவாகியுள்ளது. இதனால் சுகாதார சீர்கேட்டில் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில். சமூக ஆர்வலர்கள் வேதனை?., சாலையோரங்களில்கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை மாடுகள் தின்று உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிளாஸ்டிக் உபயோகத்திற்கு  தடைவிதித்தது. அதன் பிறகு, மளிகை காய்கறி, உணவு விடுதிகள், மற்ற பிற நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் கொடுப்பது அதிக அளவில் குறைந்தது. பிளாஸ்டிக் பைகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கும் கடைகளில் அடிக்கடி சோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து 80 சதவீத அளவிற்கு பயன்பாடு குறைந்து. பொதுமக்களும் பொருட்கள் வாங்க துணிப்பைகள், பாத்திரங்கள் எடுத்து வந்து பொருட்களை வாங்கி சென்றனர். உலகத்தையே ஆட்டிப்படைத்த கொடூர தொற்று நோய் எனப்படும் பல லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா தோற்றால் தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்தன. பின்பு கடைகள் திறக்கப்பட்டன. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகமானது வேலூர் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய்தொற்றை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் பிளாஸ்டிக் விற்பனையை தடுக்க முடியவில்லை. இதனால் வேலூர் மாநகராட்சி 3வது மண்டலம் நகரில் தற்பொழுது எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பைகள் தான் வலம் வருகின்றன. மளிகை கடைகள், காய்கறி கடைகள், உணவு விடுதிகள், மாமிச கடைகள், பூக்கடைகள், பழக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில் கொடுக்கப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் இதனை கண்டு கொள்வதில்லை. நகரின் முக்கிய வீதிகளில் மலைபோல் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. வணிக நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு வழங்கப்படும் உணவு பொட்டலங்கள் அனைத்துமே பிளாஸ்டிக் பைகளில் கொடுக்கபட்டு பின்னர்  சாலை, தெருக்களில் கொட்டப்படுவதால் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்தாலும் உடனே அந்த இடத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவது வழக்கமாகிவிட்டது.

இந்த பிளாஸ்டிக் பைகளை தெருவில், சாலையோரங்களில் மேயும் மாடுகள் தின்று வருகிறது. இதனால் அந்த மாடுகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்த மாடுகள் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டு ரோட்டில் நடக்கமுடியாமல் பரிதாபமாக திரிகிறது. எனவே கால்நடைகளையும், நகரின் சுகாதாரத்தையும் காக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை மீண்டும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநகராட்சி 3வது மண்டல சுகாதார அலுவலர் பாலமுருகனும்., சுகாதார ஆய்வாளர் கடலூர் சிவகுமார் ஆகியோரின் நடவடிக்கை மெத்தனப் போக்கே காரணம் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள் கருத்தாக தெரிவித்துள்ளனர்.