இந்நிலையில் அதை தவறாக பயன்படுத்தி அவர் மனைவியிடமிருந்து புருசோத்தமன்
கிரயப்பத்திரம் கடந்த 30,09, 2008ல் செய்து கொண்டுள்ளார். இது சம்மந்தமாக காட்பாடி உரிமையியல் நீதிமன்றத்தில் அசல் வழக்கு எண் 42/2020 மற்றும் சார்பு நீதிமன்றம் அசல் வழக்கு எண்.1051/2022 நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அவரது நிலத்தை புருஷோத்தமன் பெங்களூரைச் சேர்ந்த லக்ஷ்மய்யா என்பவருக்கு கடந்த 10.05.2023ம் வருடம் கிரையம் செய்துள்ளது சம்மந்தமாக ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில் கடந்த 02.07.2023 அன்று அவரது நிலத்தில் உள்ள வீட்டில் இருந்தபோது மேற்படி லக்ஷ்மய்யா மற்றும் அவருடன் சம்பத், ராமய்யா, ஜீவா ஆகியோர் சம்பத்துக்கு சொந்தமான இரண்டு டிராக்டரால் சுமார் 20 ஆட்களுடன் வந்து அவரது நிலத்திலிருந்த மாட்டுகொட்டைகை மற்றும் வீட்டை டிராக்டர் மூலம் இடித்து தள்ளினார்கள். அதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் ஆகும். மேலும் நிலத்திலிருந்த மாட்டு தீவன பயிர்களையும் சேதப்படுத்தினார்கள். எனவே அவர் மற்றும் அவரது மனைவி நதியா ஏன் தகராறு செய்கின்றீர்கள் என கேட்டனர். அப்போது இவரையும், அவரது மனைவியையும் அசிங்கமான அறுவெருப்பான வார்த்தைகளில் பேசி லக்ஷ்மய்யா, சம்பத் கையில் வைத்திருந்த இரும்பு ராடு கொண்டு அடித்து அதனால் தலையில் கணவன், மனைவிக்கும் ரத்த காயம் ஏற்பட்டு கீழே விழுந்தபோது மேற்படி லக்ஷ்மையா, சம்பத், ராமையா, ஜீவா ஆகியோர் காலால் என் மீதும் என் மனைவி வயிறு மீதும் மிதித்தார்கள். மேலும் என் மனைவி கழுத்திலிருந்த தாலி செயின் 5 சவரனை பறித்துக் கொண்டு தாக்கவே இவர்கள் உயிருக்கு பயந்து ஓடிவந்து வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அப்போது அவரது மனைவிக்கு கருகலைப்பு ஏற்பட்டுள்ளது. 2 மாத கரு இருந்தது கலைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இம்மனுவுடன் என் நிலத்தில் உள்ள மாட்டுகொட்டகை இடித்து தள்ளியதற்கான போட்டோக்கள் மற்றும் மாட்டுத்தீவன பயிர்கள் சேதப்படுத்தியதற்கான போட்டோக்கள் மற்றும் அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான மருத்துவ அறிக்கையை மனுவுடன் இணைத்துள்ளார். மறுநாள் பனமடங்கியில் இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் லக்ஷ்மையா, சம்பத், ராமையா, ஜீவா ஆகியோர் மீது புகார் கொடுத்தார். புகார் பெற்ற பின்பு போலீசார் இவரை மட்டும் பலமுறை அழைத்து எதிர் தரப்பு வராததால் இவரை அனுப்பி விட்டார்கள். இந்நிலையில் நிலத்திற்கு சம்பத் தினமும் 5 அடியாட்களுடன் வந்து நிலத்தை ஆக்கிரமித்து வருகிறார். அது சம்பந்தமாக தட்டி கேட்ட போது கணவன், மனைவியையும் அன்று அடித்ததை போல் மீண்டும் அடித்து அந்த ஊரில் இல்லாமல் ஒழித்து கட்டி விடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் அவர் ஆளுங்கட்சி செல்வாக்கு உள்ளவர் காவல் நிலையத்திலும் சரிவர விசாரனை மேற்கொள்ள ஒத்துழைப்பு கொடுக்காமல் அலைகழித்து வருகின்றார். காவல்துறையினரும் அவருக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர். எனவே இவரும் , அவரது மனைவியும் தினம் தினம் அவர்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என பயந்து மிகுந்த மனஉளைச்சல் அடைந்து தற்கொலை செய்துக்கொள்ளும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே அவரது நிலத்தில் அத்துமீறி நுழைந்து என் உடைமைகளுக்கு சேதம் ஏற்படுத்தி என் மனைவி தாலி செயின் பறித்து கொண்டு, என் மனைவிக்கு கருசிதைவு ஏற்பட காரணமாக இருந்து என்னை நிலத்தை காலி செய்யவில்லை என்றால், கொலை செய்துவிடுவோம் என மிரட்டும் லக்ஷ்மையா, சம்பத், ராமையா, . ஜீவா ஆகியோரை அழைத்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டுமென்றும் நீதிமன்ற வழக்கு முடியும் வரை நிலத்தை ஆக்ரமிப்பு செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டு மனு அளித்துள்ளார். இந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட வேலூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எதிரிகளை கைது செய்வதாக உறுதி கூறினார். இதையடுத்து கணவன், மனைவி இருவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து கலைந்து சென்றனர்.