காட்பாடி தாலுக்கா அலுவலகத்தில் ஆதார் சேவை மையத்தில் பணிபுரியும் சவிதா மீது நாளுக்கு நாள் புகார் கூறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு?
தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசு பொது இ-சேவை மையம் பல்வேறு கிளைகளைப்பெற்ற ஆதார் கட்டாயமாக் கப்பட்டு வருகிறது. அதனால், ஏற்கெனவே ஆதார் எண் பெற்றுள்ள குழந்தைகள், 5 வயதை பூர்த்தி அடையும்போதும், வாடகை வீட்டில் குடியிருப்போர் வீடு மாறும் போதும், தங்கள் ஆதார் விவரங்களை திருத்த வேண்டியுள்ளது. புதிய ஆதார் பதிவுகளை மேற்கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் பொது இ-சேவை மையம் சார்பில் வேலூர் மாவட்டம். முழுவதும் 13 பொது இ-சேவை மையம் அமைந்துள்ளது. தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் பொது இ-சேவை பல்வேறு முகமைகள் மூலமாக ஆதார் பதிவு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் நீண்ட நேரம் காத்திருப்பு, மையங்களில் போதிய அடிப்படை வசதிகள் இன்மை, ஆபரேட்டர்களின் அணுகுமுறையில் குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்து வருகின்றன. காட்பாடி தாலுகா அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது இந்த மையத்தில் காட்பாடி. கல்புத்தூரை சார்ந்த சவிதா என்பவர் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார். இவர் காட்பாடி தாலுகா அலுவலகத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் பக்கத்திலே இருப்பதால் நாள்தோறும் காலை 10 மணிக்கு ஆதார் சேவை மையத்திற்கு வந்து திறக்கப்பட்டு மாலை 5.30 மணிக்கு ஷட்டரை மூடிவிடுகிறாராம். மாநகராட்சி 1வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதி பொதுமக்கள், முதியவர்கள், பள்ளி, கல்லூரி மாணவியர்கள், மற்றும் கிராமப்புறங்களில் இருந்தும் படிப்பறிவில்லாத பாமர மக்கள் காட்பாடி தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் சேவை மையத்தை நாடினால் அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இன்று போய் நாளை வா என்று கடவுள் விநாயகர் பெருமாள் கூறுவார். சனி பகவானை அது போன்று கூறப்படுவதுவுடன் பயனாளிகளை அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக பயனாளி ஒருவர் கூறுகையில் காட்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட செங்குட்டை சத்திரம் தெருவை சேர்ந்த மனோகர் என்பவர் மே மாதம் 21ஆம் தேதி காலை 10:30 மணிக்கு காட்பாடி ஆதார் சேவை மையத்தை நாடி உள்ளார் மனோகர். அங்கு பணியாற்றி வரும் கவிதா என்பவர். மரியாதையாக நடத்தாமல் அந்த முதியவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இங்கு உனக்கு ஆதார் எடுக்க முடியாது நீ எங்கு வேண்டுமென்றாலும் பொய் சொல் எனக்கு பயமில்லை நீங்கள் அனைவரும் இங்கு தான் வந்து என்னை தொந்தரவு செய்கிறீர்கள் இது அரசு பொது இ-சேவை ஆதார் மையமாகும் இங்கு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தான் டோக்கன் மூலம் ஆதார் அப்டேஷன் செய்ய முடியும் உனக்கு வேண்டுமென்றால் விருதம்பட்டு காவல் நிலையம் பின்புறம் செயல்பட்டு வரும் எல் காட் நிறுவனத்தின் ஆதார் சேவை மையத்திற்கு சென்று அங்கு பணிபுரியும் உமா மகேஸ்வரி என்பவரை தொந்தரவு செய் என்னை விட்டு விடு என்று கூறி இரண்டு நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார் மனோகரனை. இவர் இது சம்பந்தமாக காட்பாடி வட்டாட்சியரை நேரில் சந்தித்து தனக்கு நேர்ந்த அனுதியைப் பற்றி கூறியுள்ளார். வட்டாட்சியர் ஆதார் சேவை மையத்தில் பணிபுரியும் கவிதாவை கூப்பிட்டு பலமுறை கண்டித்ததாக கூறப்படுகிறது. அவர் அப்பவும் திருந்தியபாடுயில்லை என்று கூறப்படுகிறது. இது சம்பந்தமாக நமது நிருபர் குழு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வேலூர் கோட்டா அலுவலகம் சத்துவாச்சாரி நீதிமன்றம் அருகாமையில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் சீனிவாசன் என்பவரை போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது நான் என்னவென்று விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்கிறேன் என்று கூறினார். ஆனால் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை?. மேலும் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் சேவை மையத்தில் நாள்தோறும் வந்து செல்லும் பயனாளிகள் மன உளைச்சலுடன் செல்வதாக புலம்பி தள்ளியதை நம் காதால் கேட்க முடிந்தது. மேலும் அரசு கேபிள் டிவி நிறுவனம் கோட்டா அலுவலகத்தில் பணிபுரியும் மேலாளர் சீனிவாசன் வேலூர் சத்துவாச்சாரியைப் பகுதியை சார்ந்தவர் ஆவார். இவர் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் அரசு பொது இ-சேவை மையத்திற்கு பணிக்காக தேர்வு செய்து அவர்களிடம் ரூபாய் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை லஞ்சமாக பெற்றுக்கொண்டு தாசில்தாருக்கு பரிந்துரை செய்து அவர்களை பணியில் அமர்த்தியதாக கூறப்படுகிறது. மேலும் நேர்மையான தாசில்தார்கள் யாராவது வந்தால் அவர்களையே கண்ட்ரோலில் எடுத்து அவருக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து பூர்த்தி செய்து தருவதாக வேலூர் அரசு கேபிள் டிவி நிறுவனம் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அலுவலகம் வெளிப்புறம் பேசிக் கொள்கிறார்களாம், மேலும் இது ஒரு புறம் இருக்க இவர் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக அரசு கேபிள் டிவி நிறுவனம் வேலூர் கோட்டா அலுவலகத்தில் மேலாளராக பணிபுரிந்து பல லட்சம் சம்பாதித்து தனது சொந்த ஊரான போளூரில் இடம், நிலம், வீடு கட்டியும், தங்க ஆபரணங்கள் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் காட்பாடி தாலுக்கா அலுவலகத்தில் ஆதார் சேவை மையத்தில் பணிபுரிந்து வரும் சவிதா என்பவரும் மேலாளர் சீனிவாசனும் கல்லூரியில் பயின்ற நண்பர்களாம் என்று இ-சேவை மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கூறிக்கொள்கின்றனர். ஆகையால் தான் கவிதாவின் மீது எந்த புகார் வந்தாலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதவாறு காப்பாற்றி வருவதாகவும். அவரை பணியிடம் மாற்றம் செய்யப்படாத காரணமும் கூறப்படுகிறது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக சம்பாதிக்க நினைத்துக் கொண்டு ஆதார் சேவை மைய ஆப்ரேட்டர் சவிதா ஒரு சில புரோக்கர்கள் பிடியில் தொலைபேசி மூலம் தகவல் அளித்து அவர்கள் அதிகம் பணம் கொடுப்பதால் அவர்களுக்கு ஆதார் அப்டேஷன் காலையிலேயே எடுத்து விடுவதாகவும். கிராமப்புறங்களில் இருந்து ஆதார் எடுக்க வரும் படிப்பறிவின்றி உள்ள பாமர மக்கள் தெரிவிக்கின்றனர். நாங்கள் என்ன செய்வது எங்களுக்கு படிப்பறிவும் இல்லை வசதியும் இல்லை நாங்கள் சென்று மேடமிடம் கேட்டால் எங்களை திட்டி தீர்த்து விடுகிறார் என்று புலம்புகின்றனர். அப்பாவி பாமர மக்கள் இனியாவது காட்பாடி தாலுகாவில் ஏங்கி வரும் ஆதார் மையத்தில் பணிபுரியும் சவிதாவை வேறு இடத்திற்கு மாற்றம் செய்து வேறு ஒருவரை ஆதார் மையத்தில் அமர்த்தி மக்கள் பணி சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் இவர்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. அல்லது வேலூர் மாவட்ட ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு அரசு அலுவலகங்களில் திடீரென சோதனை நடத்தி வருவது அனைவரும் அறிந்தது ஒன்றாகும் அதேபோன்று வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகாமையில் இயங்கி வரும் அரசு கேபிள் டிவி நிறுவனம் அலுவலகத்தில் திடீரென சோதனையிட்டால் பல லட்சம் லஞ்சப் பணமும், ஆவணங்கள் சிக்கும் என்று தெரிய வருகிறது. பொறுத்திருந்துதான் பார்ப்போம்?