காட்பாடியில் காட்டன் சூதாட்டம் படு ஜோர்:- போலிசார் உடந்தை?
காட்பாடியில் காட்டன் சூதாட்டம் படு ஜோர்:- போலிசார் உடந்தை?
வேலூர் மாவட்டம்.  காட்பாடியில் காட்டன் சூதாட்டம் ஜரூராக நடந்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக காட்பாடி, விருதம்பட்டு, காவல் நிலைய எல்லைக்குள் பல இடங்களில் காட்டன் சூதாட்டம் நடைபெறுகின்றன.

 அங்கு காட்டன் ரிசல்டுக்கு போட்ர்டெல்லாம் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 காட்பாடி பாலு என்கிற ஒருவர் தான் இதற்கெல்லாம் பாடிகார்டாக செயல்படுகிறாராம். காட்பாடி பாலுவின் செல் : 7708728233, பேர்ணாம்பட்டு - குடியாத்தம் அன்வரின் : 8667801101.. 

மேற்படி வேலூர் மாவட்டத்தில் காட்டன் சூதாட்டம் பிசினஸின் எட்டாக முத்துசாமி என்பவர் நடத்துகிறார். அவரின் தயவால் வெளியூரிலிருந்து ஆட்களை வரவழைத்து தாதாயிஸத்துடன் இந்த பிசினஸை நடத்துகிறார்.

 குடியாத்தம் காவல் எல்லைக்குட்பட்டு   ஒரு சில அரசியல்வாதி கோபி-1, கோபி-2, செந்தில், அன்வர் போன்றவர்கள் போலிஸ் ஸ்டேஷனுக்கு எதிரிலேயே காட்டன் பிசினஸ் செய்து வருகிறார்கள்.

  இதற்கு சம்மந்தப்பட்ட ஏரியா டிஎஸ்பி நேரடியாக பாதுகாப்பு கொடுத்து வாரி சுருட்டிக் கொண்டிருக்கிறாராம்.

  இது குறித்து பெயர் கூற விரும்பாத ஒருவர் தெரிவிக்கையில், கள்ளத்தனமாக காட்டன் சூதாட்டம் பிசினஸ் நடப்பது எங்களுக்கே 

 தெரியுது, ஆனால் போலிசுக்கு தெரியாதாம். இதனால் பல ஏழை குடும்பங்கள் நடுரோட்டுக்கு வந்துவிட்டது. இந்த காட்டன் சூதாட்டத்தில் எப்போதாவது யாருக்கேனும் பரிசு விழுந்தால் அதைக்கூட முழுவதுமாக கொடுப்பதில்லை. கொஞ்சம் பிரஷர் கொடுத்து கேட்டால் போலீஸ் ஆபிசுக்கு சென்று அங்கு பஞ்சாயத்து வைக்கிறார்கள். தவறு என்று தெரிந்தே அதிகாரிகள் காட்டன் சூதாட்டம் முதலாளிகளுக்கு உதவி செய்கின்றனர். இதனால் காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம் மற்றும் வேலூரில் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டது என்றார் வேதனையுடன். ஆக முத்துசாமி, கோபிக்கள், அன்வர், செந்தில் ஆகியோரை மடக்கிபிடித்து அவர்கள் மீது போலிஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் ஒழிய ஏழைகள் கள்ள லாட்டரி, காட்டன் சூதாட்டம் வியாபாரத்தில் மூழ்கி வீணாகி கொண்டுத்தான் கிடப்பார்கள். இது சம்பந்தமாக நமது நிருபர் குழு காவல்துறைக்கு பலமுறை தகவல் அளித்தும் அவர்கள் கண்டு கொள்ளாமல் காட்டன் சூதாட்டம் காட்பாடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு சட்டவிரோதமாக காட்டன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்று?