மதுரையில் : மே தின விழா" தமிழ் சினிமா நடிகர்கள் சங்கத்தினார் கொண்டாடப்பட்டது
மதுரை மாவட்டம். காளவாசலில் "மே தின விழா" தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் மே தின விழா கொண்டாடப்பட்டது. சங்க பொதுச் செயலாளரும், நடிகருமான சி.எம்.வினோத் தலைமையிலும், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் அப்பா பாலாஜி, மீசை மனோகரன், அழகப்பன், பொன்பாண்டி, சக்திவேல், பழனிவேல், கேபிஆர், திண்டுக்கல் ப்ரியா, மலர்விழி, சத்யா, துர்கா, பேச்சியம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.