தென்காசி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டல் பயிற்சி நடந்தது
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டல் குழு உறுப்பினர்கள் பயிற்சி
 நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் 10, 12 ஆம் வகுப்புகளில் தேர்வு எழுதிய / தேர்வு எழுதாத பள்ளி இடைநின்ற மாணவர்கள் தமது கல்வியை தொடர வாய்ப்பு அளிக்கும் பொருட்டு வருகின்ற 09.05.2023 முதல் ஒவ்வொரு அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு (Carrier Guidance Cell) செயல்பட உள்ளது. இக்குழுவின் உறுப்பினர்களாகிய மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், துணைத் தலைவர், கல்வியாளர் (இல்லம் தேடிக் கல்வித் தன்னார்வலர்), பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் அனைவருக்குமான மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி 26.04.2023 முதல் 28.04.2023 வரை தென்காசி மாவட்டத்தில் நடைபெற்றது.

 அதன் முதல் நாளாகிய 26.04.2023 அன்று புளியங்குடி எஸ்.வீராச்சாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர் தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலர் சீவலமுத்து வாழ்த்துரை வழங்கினார்.

 பயிற்சியின் முதன்மைக் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் சீனிவாசன், ரூபி செல்வராணி மற்றும் NSS திட்ட அலுவலர் திரு.அருள் முகிலன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகராஜ், ஆசிரியர் பயிற்றுநர்கள் பிரதாப் மற்றும் ஜேம்ஸ் ஆகியோர் செயல்பட்டனர். தொடர்ந்து 27.04.2023 அன்று அகரக்கட்டு ஜே.பி.பொறியியல் கல்லூரியிலும், 28.04.2023 அன்று ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியிலும் இப்பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகள் சார்பாக கலந்து கொண்டனர்.