தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நிலம் வாங்கும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்யலாம்
 தென்காசி மாவட்டத்தில், தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு நிலம் வாங்கும் திட்டம் மற்றும் தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் விற்பனை முகவர் திட்டம் ஆகிய பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ப.ஆகாஷ், தகவல் . தென்காசி மாவட்டத்தில், தாட்கோ மூலமாக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விவசாய நிலம் அற்ற ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு வேளாண்மை நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் நிலம் வாங்கிட தாட்கோ மூலமாக மொத்த திட்ட தொகையில் 50% மானியம் அல்லது அதிக பட்சமாக 5 இலட்சம் வரை வழங்கப்படும் . இத்திட்டத்தின் கீழ் மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் மகளிர் இல்லாத குடும்பங்களில் கணவன் அல்லது மகன்கள் விண்ணப்பிக்கலாம் . மேலும் வாங்க உத்தேசித்துள்ள நிலம் விற்பனையாளர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் அதிக பட்சமாக 2.50 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் விற்பனை முகவர் திட்டத்தின் கீழ் விற்பனை நிலையம் அமைக்க ஒரு நபருக்கு மொத்த திட்டத்தொகை 3.00 இலட்சம் வீதம் அதற்கு மானியமாக 30 சதவீதம் 90,000 ஆயிரம் வழங்கப்படும். மேற்கண்ட இரண்டு திட்டங்களில் விண்ணப்பிக்க 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 3.00 இலட்சத்திற்குள் இருத்தல் வேண்டும் . விண்ணப்பங்களை தாட்கோ இணயதளத்தில் ஆதிதிராவிடர்களுக்கு http://application.tahdco.com என்ற முகவரியிலும், பழங்குடியினர்களுக்கு http://fast.tahdco.com என்ற முகவரியிலும் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இத்திட்டங்கள் தொடர்பாக விளக்கங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, வட்டாட்சியர் அலுவலகம் 2 - வது தளம், தென்காசி - 627811- என்ற முகவரியிலும் கைபேசி எண் : 7448828513 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார் .