லஞ்சம் பெற்ற விஏஓவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆர்.டி.ஓ உத்தரவு
மதுரையில், கணவனால் கைவிடப்பட்டோர் சான்றிதழ் வழங்க, கிராம நிர்வாக அதிகாரி, 250 ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் சம்மந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மதுரை மேலமடை பகுதியில் உள்ள விஏஓ அலுவலகத்தில், யாகப்பா நகர் பகுதியை சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவர், கணவரால் கைவிடப்பட்டோர் சான்றிதழுக்காக விண்ணப்பத்து இருந்தார். அப்போது சான்றிதழ் வழங்குவதற்கு கிராம நிர்வாக அதிகாரி ரமணி என்பவர் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. அப்போது முதல் தவணையாக 250 ரூபாயை கொடுக்கும் போது, அந்த காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டு உள்ளது.
லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் கிராம நிர்வாக அலுவலர் ரமணியை பணியிடை நீக்கம் செய்து மதுரை வருவாய் அலுவலர் பிறப்பித்துள்ளது.
மேலும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ரமணி மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டும் உள்ளது.