பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள எந்த கடைகளிலும் பொருட்கள் வாங்கலாம் என்ற அரசு உத்தரவை புறந்தருளும் கொடூரம்?
தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் அரிசி கடத்தலில் கடை விற்பனையாளர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்கள் தமிழகத்தில் எப்பகுதியில் உள்ள (ரேஷன்) நியாய விலை கடையிலும் பொருட்கள் வாங்கலாம் என்ற உத்தரவை சமீபத்தில் பிறப்பித்து இருந்தது. ஆனால் அந்த அரசு உத்தரவை புறந்தள்ளும் விதத்தில் கடை விற்பனையாளர்கள் ஈடுபட்டு வருவது தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் தமிழக அரசு மீது அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது. (ரேஷன்) நியாய விலைக் கடைகளில் அரிசி கடத்தலில் கூட பல கடை விற்பனையாளர்கள் உடந்தையாக இருப்பதாக (ரேஷன்) நியாய விலை கடையில் அரிசி கடத்தல் வழக்குகளில் தொடர்ந்து சிக்கிவரும் நிலையில் தற்போது குமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கும் அரிசியில் கடை விற்பனையாளர்கள் பெரும் குளறுபடி ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வெள்ளிகோடு கூட்டுறவு கடன் வேளாண்மை சங்கத்தின் கீழ் இயங்கும் பொது விநியோகத் திட்ட (ரேஷன்) நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு (ரேஷன்) நியாய விலை கடையில் பொருட்கள் வழங்குவதில் கடை விற்பனையாளர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வெள்ளி கோடு கூட்டுறவு கடன் வேளாண்மை சங்கத்தின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் இதனால் பல கடைகள் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே இயங்குவதாகவும் இதனால் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மற்ற கடைகளில் சென்றால் பொருட்கள் விநியோகிக்க கடை விற்பனையாளர்கள் மறுத்து வருவதும் அது பற்றி கேள்வி எழுப்புவர்களை மிரட்டுவதற்காகவே குடிபோதை ஆசாமிகளை கடை முன் தயாராக உட்கார வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளது. அதை நிரூபிக்கும் விதமாக மேற்கண்ட கடன் வேளாண்மை சங்கத்தின் கீழ் இயங்கும் வெள்ளி கோடு பொது விநியோக ரேஷன் கடை திங்கட்கிழமையன்று (28-11-2022) அன்று மூடப்பட்டு இருந்ததாகவும் அந்த கடையில் உள்ள விற்பனையாளர் முளகுமூடு பகுதியில் உள்ள கடையில் பணியில் இருப்பதால் அங்கு சென்று பொருட்கள் வாங்க ஒரு சிலர் சென்றபோது மேற்கண்ட கடையில் இருப்பு வைக்க வேண்டிய அரிசியில் குறைவாக இருப்பதாகவும் அதனால் இங்கு அரிசி வழங்க இயலாது என்றும் திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு கடை விற்பனையாளர் தெரிவித்து உள்ளார். இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று உள்ளனர். கடந்த மாதமும் இதே போன்ற குளறுபடிகள் நடந்து பலர் ரேஷன் அரிசி வாங்க இயலாமல் செய்ததாகவும் அவர்களுக்கு கடந்த மாத அரிசி வழங்கப்படவில்லை என்றும் ஒதுக்கீடு குறைவாக இருப்பதால் அனைவருக்கும் ரேஷன் அரிசி வழங்க இயலவில்லை என்று கடை விற்பனையாளர்கள் கூறி பொதுமக்களை ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தமிழக அரசு தான் அரிசி ஒதுக்கீடு செய்வதில்லை என்று கடை விற்பனையாளர்கள் கூறுவதை நம்பி தமிழக அரசின் மீது தங்களது வெறுப்பை சுமத்தி வருகின்றனர். கடை விற்பனையாளர்களால் தமிழக அரசுக்கு அவ பெயர் ஏற்பட்டு வருகிறது. அரசு சார்பில் சரியான அளவில் பொதுமக்களுக்கு விநியோகிக்க அரிசி வழங்கியும் கடை விற்பனையாளர்கள் தங்களது மோசடி ஊழலால் பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டிய அரிசியை கடத்தல் கும்பல்களுக்கு விற்று வருவதால் தான் பொதுமக்களுக்கு விநியோகிக்காமல் அரிசி ஒதுக்கீடு குறை உள்ளதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பல்வேறு கட்ட குழுக்களை நியமித்து கடத்தலை தடுக்க வியூகம் அமைத்தாலும் ரேஷன் அரிசி கடத்தல் என்பது தொடர்கதை ஆகி வருகிறது. ரேஷன் கடைகளில் பறக்கும் படைகள் ஆய்வு செய்து அவ்வப்போது ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதித்தாலும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் பொது விநியோகத் திட்டத்தில் குளறுபடி செய்து ஊழல் செய்து வருவதால் பொதுமக்களுக்கு அரிசி உட்பட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கடையில் பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் கடையில் உள்ள பொருட்கள் இருப்பு எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளும் விதமாக ஒவ்வொரு கடையிலும் இருப்பு விவரங்களை தினமும் குறிப்பிட்டு வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் தமிழக அரசின் உத்தரவுப்படி எந்த கடைகளிலும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டைக்கு உணவு பொருட்களை பெறும் வசதியை ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் முன் வர வேண்டும் என்றும் தமிழக அரசின் உத்தரவை செயல்படுத்தாத ரேஷன் கடை விற்பனையாளர்கள் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நடைபெறும் ஊழலையும் ரேஷன் அரிசி கடத்தலையும் சிறிதளவாவது தடுக்க முடியும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.