வேலூர் ஸ்மார்ட் சிட்டி சாலைப் பணி கிடப்பின் போக்கால் கல்லூரி, பள்ளிக்கு செல்லும் மாணவிகள் பள்ளி குழந்தைகள் நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகும் அவல நிலை?
வேலூர் ஸ்மார்ட் சிட்டியின் அவல நிலைப் போக்கு கல்லூரி, பள்ளிக்கு செல்லும் சாலைப் பணி கிடப்பில் போடப்பட்ட நிலையில் இனியாவது சீரமைக்கப்படுமா?

 காட்பாடி வட்டம். காந்திநகர் ஆக்சிலியம் கல்லூரி, பள்ளிக்கு செல்லும் சாலையோர குழி பள்ளங்கள் புழுதியில் பயணிக்கும் பொதுமக்களும் மாணவர்களும் முகம் சுழிக்கும் அவல நிலை?

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டம் அலட்சியப் போக்கால் காந்திநகர் ஆக்சிலியன் கல்லூரி, பள்ளிக்கு நாள்தோறும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள், அப்பகுதிகளில் அரசு அலுவலர்கள். பல விஐபிக்களின் இல்லங்கள் அமைந்திருக்கும் நிலையில் கார். லாரிகள் அதிக அளவில், நாள்தோறும் சுமார் 300-க்கும் மேற்பட்ட கனராக வாகனங்கள் இந்த சாலையில் செல்வதால் மண் புழுதிக்கள் பறக்கும் அவல நிலை உள்ளதாம் இதனால் அக்சிலியம் கல்லூரி. பள்ளிக்கு செல்லும் மாணவிகள் காலை, மதியம், மாலை என கல்லூரி. பள்ளிக்கு பயணிக்கும் மாணவிகள் ஓடப்பிள்ளையார் கோவிலில் பேருந்து நிலையத்தில் இறங்கியும் காந்திநகர் அக்சிலியம் ரவுண்டுனா பேருந்துகளின் இறங்கியும் கல்லூரிக்கு நடந்து செல்லும் நிலை உள்ளதாம் இதனால் நடைபாதை குண்டும் குழியுமாக மண் புழுதி பறக்க மாணவிகள், பொதுமக்களும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது இதனால் நோய்வாய்ப்பட்டு நுரையீரல்கள்  பாதிக்கப்படக்கூடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

வேலூர் மாவட்டம். காட்பாடி வட்டம் காந்திநகர் ஆக்சிலியம் கல்லூரி பகுதியில் சாலையில் காமராஜர் சிலை முதல் கல்லூரி. பள்ளிக்கு செல்லும் காங்கேயநல்லூர் முடியும் வரை மிகுந்த குண்டும் குழியுமாக புழுதி பறக்கும் நிலையில் சாலைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பள்ளி. கல்லூரி சிறுவர்கள், மாணவிகள் மற்றும் குறித்த நேரத்திற்கு வேலைக்கு செல்லும் பல விஐபிகள் காரில் சென்று விடும் நிலையில் அரசு அலுவலர்களும், பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அவதிப்படும் நிலை இப்பகுதியில் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே சாலை இப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் பாதியிலேயே வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை டெண்டர் எடுத்து சாலை பணிகளை முடிக்கும் டெண்டர் எடுத்தோர். பொறியாளர்கள் சாலை அமைக்கும் பணியை கிடப்பில் போட்டுவிட்டு. சாலைகளில் புழுதி பறக்காமல் இருக்க தண்ணீர் மட்டும் அடித்துக் கொண்டும் ஒருபடியாக சென்று ஜேசிபிளின் வேஸ்ட் கப்பிகலை கொண்டு ஒரு சில இடங்களில் மட்டும் வேஸ்ட் கப்பிகளை குழி பள்ளங்களை மூட வைத்து முழு பூசணிக்காய் சோத்தில் மறைப்பது போல் உதவாத கப்பிகளை ஒரு சில சாலை இடங்களில் கொட்டி பாவளா பணியை சாலைப் பணிகள் நடைபெற்றது போல் பாவளா காட்டுகின்றனர் வேலூர் மாநகராட்சி டெண்டர் எடுத்தோரும், பொறியாளர்கள் ஆகியோர் கூறி சாணியை பூசி மொழுவி விட்டனர் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் மீண்டும் புழுதி பறக்க சாலை உள்ளதாம். இதனால் நிரந்தர சாலை அமைக்காமல் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் டெண்டர் எடுத்தவர்கள் சாலைகளை அமைக்காமல் உள்ளதாகவும் இப்பணியில் இந்த தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில் உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்றும் இப்பகுதியினர் கோரிக்கை வைக்கின்றனர், வைத்துள்ளனர் சாலைக்கு விரைவில் தீர்வு காணப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்? மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் அவர்கள் உடனடியாக ஆக்சிலின் கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்லூரிக்கு செல்லும் சாலைகளை பார்வையிட்டு உடனடியாக சீரமைத்தார் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் நல்லதாக அமையும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் இல்லையென்றால் நுரையீரல் பாதிப்புகள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்படும் எனவும் கூறுகின்றனர் மன வேதனையோடு இனியாவது மீளுமா சாலை விரைவு பணி?