தருமபுரி மாவட்டம். பாப்பிரெட்டிப்பட்டி
சார் பதிவாளர் அலுவலகம் ஏங்கி வருகிறது இங்கு நாள்தோறும் 50 பேருக்கு மேல்பட்டோர் பத்திர பதிவு செய்வதற்காக வருகின்றனர். இந்த அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் தனது பட்டாவை பத்திர பதிவு செய்வது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி சார் பதிவாளர் இந்தியாவிடம் விளக்கம் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது சார் பதிவாளர் இந்தியாவின் தனி அறையில் இருந்து ஒரு நபர் வெளியே வந்துள்ளார் பிறகு இந்திரா கையில் பணம் இருந்ததை கண்டு சமூக ஆர்வலர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார் அப்போது பைலுக்குள் பணத்தை மறைப்பது. வீடியோவில் பதிவாகியுள்ளது. இது பற்றி அவரிடம் கேட்கும் பொழுது இது என்னுடைய சொந்த பணம் இதை நீங்கள் கேட்க தேவையில்லாதது என்று விவாதம் வைத்துள்ளார். அவருடைய சொந்த பணமாக இருந்திருந்தால் ஏன் டேபிள் மீது உள்ள பைலுக்கு அடியில் மறைத்து வைக்க வேண்டும் அப்படி சொந்த பணமாக இருந்திருந்தால் கட்டுக்கட்டாக சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பணங்களை கொண்டு வரலாமா? என சமூக ஆர்வலர் கேள்வி எழுப்பியுள்ளார். சார் பதிவாளர் இந்திரா என்பவர் ஏற்கனவே சேலம் மாவட்டம். சூரமங்கலத்தில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. சார் பதிவாளர் இந்திரா ஏற்கணவே லஞ்சம் அதிகமாக வாங்குகிறார் என்று பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள பத்திர எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்கள் இவரை இடம் மாற்றம் செய்ய கோரி போஸ்டர் ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இவர் மீது புகார் கொடுத்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்கின்றனர் அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்கள்
பாப்பிரெட்டிப்பட்டி சார் பாதிவாளர் இந்திராவின் மீது நடவடிக்கை பாயுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்