கல்வித் துறைக்கு களங்கத்தை விளைவிக்கும்: மாதாண்ட குப்பம் தலைமை ஆசிரியர்?
வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாதாண்டகுப்பம் காட்டூர் பகுதியில் உள்ளது. இங்கு பள்ளி தலைமை ஆசிரியராக இருப்பவர் அருணகிரி. இவர் கடந்த 15 ஆண்டுகளாக இதே பள்ளியில் பதவி உயர்வு பெற்று தலைமை ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால், இதுவரையில் இப்பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும், மாணவர்களின் நலனுக்காகவும், குறிப்பிடும்படியாக எந்த ஒரு செயலும் செய்யவில்லை என்பது ஊரறிந்த விஷயம் என்கின்றனர். இப்பள்ளிக்கு ஆண்டுதோறும் வரக்கூடிய 50,000 ரூபாய் நிதியை முறையாக செலவு செய்யாமல் இவர் கபளீகரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆறு ஆசிரியர்கள் உள்ள இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 50 மட்டுமே உள்ளது என்பது வேதனைக்குரிய விஷயம். காரணம் இவர் பள்ளியில் படிக்கும் மாணவர்களை அடிக்கடி வேர்க்கடலை, மிளகாய், வாழை இலை, பூ, தேங்காய், கீரைகள், காய்கறிகள் வேண்டுமென வீட்டிற்கும், வயல்வெளிக்கும் பள்ளி நேரத்தில் அனுப்புவதாக சொல்லப்படுகிறது. அப்படி எடுத்து வர மறுக்கும் மாணவர்களை பாடம் நடத்தும் போது ஏதாவது காரணம் காட்டி கொம்பு கொண்டு கை வீங்கும் அளவிற்கு அடிப்பதாக பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. இதனாலேயே இந்த ஊர் மக்கள் இப்பள்ளியில் பிள்ளைகளை சேர்க்காமல் தங்கள் பிள்ளைகளின் நலன் மிக முக்கியம் எனக் கருதி தனியார் பள்ளிக்கு கொண்டு போய் சேர்க்கின்றார்களாம். ஏதோ வசதி இருப்பவர்கள் சேர்க்கிறார்கள் வசதி இல்லாதவர்கள் மிகவும் வேதனைப்பட்டு மன வருத்தத்தோடு இப் பள்ளியில் மாணவர்களை படிக்க வைப்பதாக சொல்லப்படுகிறது. காரணம் ஏழை பிள்ளைகளுக்காக இருப்பது இந்த அரசு பள்ளிகள் தான். இது போன்ற பள்ளிகளிலேயே இவ்வாறு ஆசிரியர்கள் நடந்து கொண்டால் நாங்கள் எங்கே கொண்டு போய் பிள்ளைகளை சேர்ப்பது? என பெற்றோர்கள் தரப்பில் வேதனைப்படுகின்றனர். இதனாலேயே அடிக்கடி பள்ளிக்குச் சென்று முற்றுகையிட்டு பெற்றோர்களும் இது பற்றி கேள்விகள் எழுப்பி உள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இது பற்றி அதிகாரிகளிடம் புகார் கொடுப்போம் என்று கூறினால் என்னை வந்து கேள்வி கேட்கும் அளவிற்கு இங்கு யாரும் யோக்கியன் இல்லை என்றும் இந்தப் பள்ளி மட்டுமல்ல இந்த ஒன்றியத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகள் இவ்வாறு தான் இருக்கிறது. உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என சவால் விட்டு பேசுவாராம். இவருடன் பணிபுரியும் மற்ற ஆசிரியர்களிடம் இது பற்றி தனிப்பட்ட முறையில் கேட்டால் தலைமை ஆசிரியரை மீறி எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறி விடுகிறார்களாம். பின்னர் அதே ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரை கேட்டால் பள்ளிக்கு நான் பொறுப்பு யார் வந்து கேட்டாலும் நான் பதில் சொல்லப் போகிறேன் உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் என்று கூறி அனுப்பி விடுவாராம். பள்ளியின் சுற்றுச்சூழல் முறையான பராமரிப்பு இல்லை. பள்ளியின் நுழைவு வாயிற்கதவு பாதுகாப்பானதாக இல்லை. பள்ளிக்கு முன்பு பள்ளிக்குரிய பெயர்ப்பலகை இன்று வரையில் எழுதப்படவில்லை. பள்ளிக்குள் இருக்கும் வகுப்பறை கட்டிடங்களுக்கு வண்ணம் பூசப்படவில்லை. விடுமுறை நாட்களில் பள்ளிக்குள் சிலர் மது பாட்டில்கள் பயன்படுத்துவதாகவும் புகார்கள் உள்ளது. பள்ளி முன்னேற்றத்திற்காக இதுவரை நடந்த மூன்று கிராம சபை கூட்டங்களில் ஒரு கூட்டத்திலும் இவர் பங்கேற்கவில்லை மற்றும் பள்ளி மேலாண்மை குழு கூட்டங்கள் சரியாக நடத்துவதில்லை அந்தக் கூட்டங்களுக்கு அதிகாரிகளையும் வரவழைப்பதில்லை என்பது மறுக்க முடியாத குற்றச்சாட்டு கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். ஒரு தலைமை ஆசிரியர் இப்படி இருந்தால் எப்படி என்று யாராவது கேட்டால் எனக்கு விரைவில் மாறுதல் வந்துவிடும் அல்லது பதவி உயர்வு கிடைத்து விடும் நான் கூடிய விரைவில் செல்லப் போகிறேன் என்று இப்படியே சொல்லி சொல்லி காலத்தை கழித்துக் கொண்டு மாணவர்களின் கல்வி நலனை சேதப்படுத்திக் கொண்டிருக்கிறாராம் தலைமை ஆசிரியர் அருணகிரி. இதுவரை இப் பள்ளியை பார்வையிட்ட அதிகாரிகளால் எந்தவிதமான நடவடிக்கைகளும் இவர் மீதோ எடுக்காதன் காரணம் என்ன? தனது பள்ளியை பார்வையிட வரும் அதிகாரிகளுக்கு தனக்கு அரசியல் கட்சியில் பெரும்புள்ளிகள் உறவு ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் பழக்கம் எனவும், மாவட்ட அளவில் காவல் துறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் ஆகியோர் தனக்கு நன்று பரீட்சயம் எனவும் கூறி தங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் நான் செய்கிறேன் என்று பேசி அதிகாரிகளை பதில் ஏதும் பேசவிடாமல் வாயடைத்து கரன்சி கொடுத்து அனுப்பி விடுவாராம். பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்காத பெற்றோர்கள் ஏதேனும் வேலையாக பள்ளிக்குள் வந்தால் அவர்களை கைப்பிடித்து இழுத்து வந்து கழுத்தைப் பிடித்து வகுப்பறியை விட்டு வெளியே தள்ளுவாராம். இவரது செயல் ஆசிரியர் சமுதாயத்திற்கே தலைகுனிவு என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இந்த சம்பவத்தைக் குறித்து மாணவர்களோ பெற்றோர்களிடம் சொல்லி புலம்பியதும், கேலி பேசி சிரித்ததும் வேடிக்கையான விஷயம். இந்த சம்பவம் பற்றிய புகாரால் ஊரில் ஏற்கனவே பெரும் பிரச்சனையாகி விட்டதாக கூறப்படுகிறது. பள்ளியை சுற்றியுள்ள இடத்தில் பராமரிப்பு இல்லாத முறையாக பயன்படுத்தாத குடிநீர்த்தேக்க தொட்டி. குப்பை கூளங்கள் தேங்கவிட்டு அசுத்தமாக பள்ளியை வைத்திருப்பது நம் கண் முன்னே நன்றாக தெரிகிறது. காட்பாடி ஒன்றியத்தில் ஏழை மக்களின் நலன் கருதி இது போன்ற நிர்வாகத் திறமையற்ற தலைமை ஆசிரியரின் பள்ளியை உடனடியாக ஆய்வு செய்யும் படியும், ஏழை மக்களின் கல்வி நலன் காக்கவும் அரசு தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் இவர் இருந்தும் மூன்று முறை மறுத்து தொடர்ந்து இதே பள்ளியில் பணிபுரிய என்ன காரணம் என்று பொதுமக்களிடம் கேள்வி எழுகிறது. இவர் இப்பள்ளியை விட்டு சென்றால்தான் தங்கள் ஊருக்கும் மாணவர்களுக்கும் நல்ல காலம் என்று மன வேதனையுடன் கூறுகின்றனர் மக்கள். படிப்பறிவில்லாத ஏழை மக்களை ஏமாற்றிக்கொண்டு தொடர்ந்து இதே பள்ளியில் பணிபுரியும் இவர் மீது கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா? மேலும் அப்பள்ளியில் பணிபுரியும் பெண்ணாசிரியர்களை ஜன்னலில் ஓரமாக நின்று கொண்டு பின்புற அழகை ரசிப்பதும், எதிரில் நின்று பேசும் பெண்களை தனது கூலிங் கிளாஸ் கண்ணாடியை மறைத்துக் கொண்டு கழுத்துக்கு கீழே பார்ப்பதும் இவரது வாடிக்கையாம். நிர்வாக திறமையற்ற இதுபோன்ற ஆசிரியர்களால் ஆசிரியர் சமுதாயத்திற்கே அவமானம். ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியரே இவ்வாறு இருந்தால் உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் எவ்வாறு இருப்பார்கள் இவர்களிடம் படிக்கும் மாணவர்களின் எதிர்கால கதி என்ன? இவ்வாறு தங்கள் அரசியல் பலத்தை பயன்படுத்தி நடந்து வரும் தலைமை ஆசிரியர் அருணகிரியால் ஆளும் தி.மு.க. அரசுக்கு தான் கெட்டப்பெயர் ஏற்படும் என்கின்றனர் அவ்வூர் மக்கள். பள்ளிக்கு தன்னிடம் வரும் அதிகாரிகளையும் தன் வசப்படுத்திக் கொண்டு பெண் ஆசிரியர்களின் ஆடை, ஆபரணங்கள் பற்றி அவதூறாக பேசுவதும், சில பெண்ணாசிரியைகளிடம் அத்துமீறி நடந்து கொள்வதாகவும், கல்வித்துறை வட்டாரங்களால் பேசப்படுகிறது. தொடர்ந்து காட்பாடி ஒன்றியத்தில் படித்து வரும் மாணவர்களின் கல்வி தரம் குறித்து பெற்றோர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் .
தனக்கு அரசியல் பலம் உள்ளது எனவும், ஆளும் கட்சி தனதான கட்சி எனவும், பத்திரிகைத்துறை காவல்துறை அனைவரும் தனக்குத் தெரியும் எனவும் உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என தன்னை எதிர்ப்பவரிடம் இவ்வாறு கூறி மிரட்டி வருகிறாராம். தலைமை ஆசிரியர் அருணாகிரி. மாணவர்களின் கல்வி தரம் உயர அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கல்வித்துறை அதிகாரிகளும் நேரடி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.