அம்சமாக லஞ்ச லாவணத்தில் வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் அம்சா?
உதவி செயற்பொறியாளர்  அம்சாவின் கமிஷன் மோகத்தால் பேரூராட்சிகளில் நடந்து வரும் தரமற்றப்பணிகள்
வேலூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில், உதவி செயற்பொறியாளராக இருப்பவர் அம்சா இவரது கட்டுப்பாட்டில் வேலூர் மாவட்டத்தில் திருவலம், பென்னாத்தூர், பள்ளிகொண்டா, ஒடுக்கத்தூர் பேரூராட்சிகளும், இராணிப்பேட்டை மாவட்டத்தில் விளாப்பாக்கம், திமிரி, கலவை, அம்மூர், காவேரிப்பாக்கம், பனப்பாக்ககம், நெமிலி, தக்கோலம் பேரூராட்சிகளும் அதே போல் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம், உதயேந்திரம், நாட்றம்பள்ளி பேரூராட்சிகளும் வருகின்றன. இந்த பேரூராட்சிகளில் காண்ட்ராக்ட் எடுத்தவர்கள் கால்வாய்கள் கட்டுதல்,ரோடு அமைத்தல், கழிப்பறைகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை அரசின் விதிமுறைகள்படி தரமாகவும், உறுதியாகவும் செய்யவேண்டும். மேற்கண்ட பணிகளை நேரில் ஆய்வு செய்து தரமாக இருக்கும் பட்சத்தில் காண்ட்ராக்ட் எடுத்தவர்கள் பில் வாங்குவதற்கு பரிந்துரை செய்யவேண்டும் ஆனால் இவரோ ஆய்வு என்ற பெயரில் 10% கமிஷன் கொடுத்தால் மட்டுமே நீங்கள் பில் வாங்குவதற்கு பரிந்துரை செய்வேன் காரணம் சென்னை யில் உள்ள தலைமை பொறியாளர் திருமாவளவனுக்கு கொடுக்க வேண்டும் என்கிறாராம். இவர் லஞ்சம் வாங்கிய பேரூராட்சிகள் உதாரணத்திற்கு ஒடுக்கத்தூர் பேரூராட்சியில் பல லட்சம் மதிப்பில் 2 இடங்களில் ரோடு போடும் பணியை பார்வையிட சென்றப்போது காண்ட்ராக்ட் எடுத்த தி.மு.க. முக்கிய பிரமுகர்களிடமே 10% கறாராக பெற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல் பள்ளிக்கொண்டா பேரூராட்சிகளில் நடைபெற்ற வரும் பணிகளுக்கும் மேலே நாம் குறிப்பிட்ட பேரூராட்சிகளில் நடந்து வரும் பணிகளுக்கும் கமிஷன் வசூலித்து வருகிறாராம். இவர் தனது வாகனத்தில் பேரூராட்சிகளில்  ஆய்வு செய்ய போய் வரும் டீசல் செலவு சம்பந்தப்பட்ட பேரூராட்சிக்கு செல்லும் போது செயல் அலுவலர் தான் செலவு செய்ய வேண்டுமாம். இவர் ஆய்வு செய்யும் பேரூராட்சிகளில் நடந்து வரும் திட்டப்பணிகள் தரம் கேள்விக்குறிதான் என்கின்றனர். இதனால் நெந்துக்கொண்டு பல செயல் அலுவலர்கள் காண்ட்ராக்ட் எடுத்தவர்களுக்கு பில் சாங்ஷன் செய்ய கையெழுத்து போடுகின்றார்களாம். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வேலூர் மண்டல பேரூராட்சி உதவி இயக்குநர் (பொறுப்பு) பில் இருந்தார். அந்தகால கட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்பட்ட காலாவதியான லெட்டர் களை வைத்து 52 பணிகள் சட்டவிரோதமாக நிரப்பப்பட்டு குற்றச்சாட்டு இவர் மீது உண்டு. இது சம்பந்தமாக  சென்னை உயர்நீதிமன்றத்தில் பேரூராட்சி உயர் அதிகாரியின் மீது வழக்கு தொடர்ந்து நிலுவில் உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் பேரூராட்சியில்  பணியாற்றி வரும் செயல் அலுவலர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு பதவி உயர்வு ,பணி மாற்றம் என உதவி செயற் பொறியாளர் அம்சாதான் தரகராக இருந்து செயல்படுவதாக பேரூராட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.