பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற விஏஓ…. தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொது மக்கள் …
கரூர் மாவட்டம். குளித்தலை அருகே உள்ள சிவாயம் வடக்கு ஊராட்சிக்கு உட்பட்ட இரும்பூதிப்பட்டியில் இலங்கை தமிழர் முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் திருமணமான 35 வயது பெண் வசித்து வருகிறார்.
பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற விஏஓ
இவரது கணவர் வெளியூரில் பணிபுரிந்து வரும் நிலையில், மாதம் ஒரு முறை வீட்டிற்கு வந்து மனைவியை பார்த்து சென்றுள்ளார். இந்த நிலையில், 29ஆம் தேதி, சிவாயம் வடக்கு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் அன்புராஜ் என்பவர், அந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து, அங்கு தூங்கி கொண்டிருந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்றுள்ளார்.
தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொது மக்கள்
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த கத்தி கூச்சலிட்டு உள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், விஏஓ அன்புராஜுக்கு தர்மஅடி கொடுத்து விரட்டி உள்ளனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், மகளிர் போலீசார் விஏஓ அன்புராஜ் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அங்குள்ள கிளைச்சிறையில் அடைத்தனர். பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கிராம நிர்வாக அலுவலர் கைதான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.