கஞ்சா வியாபாரி ரவுடிகளுக்கு (AWJUT) அனைத்து உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம் தமிழ்நாடு பொதுச்செயலாளர் கண்டனம்
கஞ்சா வியாபாரி ரவுடிகளுக்கு (AWJUT) அனைத்து உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம் தமிழ்நாடு பொதுச்செயலாளர் கண்டனம் 
 வின் நியூஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வரும் கிறிஸ்துராஜ் என்பர் சென்னை புழல் பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்த வியாபாரிகளை காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தும் அதை துணிச்சலுடன் செய்தி எடுத்ததற்காகவும் வின் நியூஸ் தொலைக்காட்சி செய்தியாளர். இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்திய சென்னை புழல் பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து ரவுடித்தனம் வரும் ரவுடிகளை பிணையில் வர முடியாத சட்டத்தில் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என AWJUT அனைத்து உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம் தமிழ்நாடு. சார்பில் கேட்டுக் கொள்கிறோம் மேலும் தமிழகத்தில் உழைக்கும் செய்தியாளர்கள் உடமைக்கும் உயிருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலைதான் நிலவி வருகிறது, உடனடியாக தமிழக அரசும் காவல்துறையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு தமிழகத்தில் உழைக்கும் செய்தியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறது AWJUT அனைத்து உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம் தமிழ்நாடு, தமிழகத்தில் தொடர்ந்து இதே நிலை நீடிக்கும் ஆனால் ஒட்டுமொத்த செய்தியாளர்களையும் ஒன்று திரட்டிமிகப்பெரிய எழுச்சிப் போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


மாநில பொதுச்செயலாளர் S.ராஜாமுகமது BA,
தொடர்புக்கு: 9092222864