திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதியின்படி டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்கவோ, வழங்கவோ, சேவை செய்யவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் இவ்விதி தொடர்பாக விளம்பர பலகை வைத்திடவேண்டும். மேலும் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் வழங்கப்படாமல் இருப்பதை உறுதி செய்திட போலீசாருடன் இணைந்து மதுபான கடை மற்றும் பார்களில் ஆய்வு நடத்தவும் சென்னை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, ஆணையர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவு), டாஸ்மாக் மாவட்ட மேலாளர், திருவண்ணாமலை, திருவண்ணாமலை கோட்ட கலால் அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மார்க் கடைகளில் சிறார்கள் மதுவாங்கிய செல்கிறார்களா அல்லது சேல்ஸ்மேன்கள் ஐந்து ரூபாய் முதல் 20 ரூபாய்க்கு ஆசைப்பட்டு சிறார் என்றும் பாராமல் மது இருக்கிறார்களா என ஆய்வு நடத்தப்படுமா என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மதுவுக்கு ஆசைப்பட்டு 16.எது 21 வயது எது என்றே தெரியாமலே டாஸ்மாக் விற்பனையாளர்கள் 5-10க்கும் ஆசைப்பட்டு மது விற்பனை அதிரடி காட்டுவாரா டாஸ்மாக் மாவட்ட மேலாளர்?
• Bharathaidhazh
தி. மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா?