இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்காக லஞ்சம் வாங்கி ஏமாற்றிய விஏஓ பணத்தை மீட்டுதருமாறு விருத்தாச்சலம் சார் ஆட்சியரிடம் விவசாயி மனு.?
கடலூர் மாவட்டம். திட்டக்குடி வட்டம் பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி த/பெ முத்துசாமி, இவரது தாய் சின்னபிள்ளை க/பெ முத்துசாமி என்பவர் கடந்த ஆண்டு இவரது தந்தை முத்துசாமி தந்தை பெயர் பெரியசாமி கடந்த 6 மாதத்திற்கு முன்பும் இறந்துள்ளனர்.
இவர்களின் இறப்புச் சான்றிதழ் பதிவு செய்து பரிந்துரை செய்ய அப்போது கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த மகேந்திரன் என்பவரிடம் சென்று கேட்டுள்ளார் அதற்கு அவர் தன்னிடம் 2000 ரூபாய் லஞ்சம் கொடு உன் அம்மா அப்பா இறப்புச் சான்றிதழுக்கு பதிவு செய்து பரிந்துரை செய்கிறேன் என்று சொல்லி உள்ளார்.
பின்னர் தட்சிணாமூர்த்தி தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி இருக்கிறார் அதற்கு விஏஓ மகேந்திரன் ரூபாய் ஆயிரமாவது லஞ்சம் கொடுத்தால் தான் சான்றிதழ் பதிவு செய்வேன் என்று அவரிடம் கூறியுள்ளார்.
பின்னர் மனுதாரர் தட்சிணாமூர்த்தி ரூபாய் ஆயிரத்து அங்கு இங்கு குறட்டை கொண்டு விஏஓ மகேந்திரனிடம் சென்று கொடுத்துள்ளார். ரூபாய் ஆயிரம் லஞ்சம் பெற்றுள்ளார். அதன் பிறகு பல மாதங்கள் ஆகியும் தட்சணாமூர்த்தியின் தாய், தந்தை இறப்புச் சான்றிதழை பதிவு செய்து பரிந்துரை சான்று வழங்கவில்லை இதுபோல இவர் மேல் பல ஊழல் புகார் எழுந்த நிலையில் கழுதூர் கிராமத்திற்கு இடமாற்றம் செய்து கொண்டு சென்று விட்டார்.
மேலும் தட்சிணாமூர்த்தி பலமுறை விஏஓ மகேந்திரனை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டதற்கு பணம் தர முடியாது என்றும் மிரட்டுவதாகவும் கூறினார். தாய் தந்தையின் இறப்பு சான்றிதழ் கேட்ட மனுதாரர் தட்சிணாமூர்த்தி தன்னிடம் லஞ்சமாக பெற்ற ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்டு தருமாறும் லஞ்சம் வாங்கிய விஏஓ மகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விருத்தாசலம் சார் ஆட்சியரிடம், திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
இறப்பு சான்றிதழ் வழங்க இறக்கமே இல்லாமல் பணம் வாங்கிய இரக்கமற்ற விஏஓ மகேந்திரன் மீது சம்பந்தப்பட்ட மாவட்ட வருவாய் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா அப்பாவி தட்சிணாமூர்த்தியின் பணத்தை மீட்டு கொடுக்குமா?
அதேபோல் பல ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டும் பல செய்தித்தாள்களில் செய்திகள் வந்த பிறகும் எந்த அதிகாரிகளும் இதுவரை கண்டு காணாமல் இருப்பதைப் பார்த்தால் அவர்களுக்கும் நான் வாங்கும் லஞ்சம் பணத்தில் ஒரு பங்கு செல்வதாக சமூக ஆர்வலர்கள் புலம்பி தள்ளுகின்றனர்