தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை தத்தமது பாகங்களில் முழுமையாக இணைத்து சிறப்பாக பணிபுரிந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ( BLOS ) , அவர்களது பணியினை பாராட்டும்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை தத்தமது பாகங்களில் முழுமையாக இணைத்து சிறப்பாக பணிபுரிந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ( BLOS ) , அவர்களது பணியினை பாராட்டும் விதமாக பரிசு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் வழங்கினார் . இந்திய தேர்தல் ஆணையம் , வாக்காளர் பட்டியலினை 100 % தூய்மையாக்கும் பொருட்டும் , வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனித் தகவல்களை உறுதிப்படுத்தவும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இரு வேறு தொகுதிகளில் இடம் பெறுதலை தவிர்க்கும் பொருட்டும், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை 01.08.2022 முதல் தொடங்க உத்தரவிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 1504 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ( BLOS ) வாயிலாக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை தத்தமது பாகங்களில் 100 % முழுமையாக இணைத்து சிறப்பாக பணிபுரிந்த 10 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ( BLOs ) , அவர்களது பணியினை பாராட்டும் விதமாக பரிசு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் , மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ஜெய்னுலாப்தீன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது ) முத்துமாதவன் உதவி ஆணையர் ( கலால் ) ராஜமனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குணசேகரன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்  கந்தசாமி . அலுவலக மேலாளர் ( பொது ) ஹரிகரன் ஆகியோர் உடன் உள்ளனர்.