கலவை பேரூராட்சியில் காலியாக உள்ள துப்புரவு மேற்பார்வையாளர் பணியிடம் ஏலம்?

இராணிபேட்டை மாவட்டம். கலவை பேரூராட்சியில் காலியாக உள்ள துப்புரவு மேற்பார்வையாளர் பணியிடம் ஏலம்?

சென்னை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் பேரூராட்சி துறை இயக்குனருக்கு சமூக ஆர்வலர் ஒருவர் ஒரு புகார் மனு அனுப்பி உள்ளார். அதில் இராணிபேட்டை மாவட்டம், கலவை பேரூராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளர் பணியிடம் காலியாக உள்ளது. அரசு பணியமைப்பு விதிகள் 8-ன்படி மற்றும் பேரூராட்சி விதிகளின் படியும் சுகாதார மேற்பார்வையாளர் பதவி BY PROMOTION FROM CATEGORY 2 OF CLAUSES 11-ன் படி அங்கு பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் பணியிடத்தில் இருந்து 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதுநிலை துப்புரவு பணியாளருக்கு பதவி உயர்வு அளித்து பணியமர்த்த வேண்டும் என உள்ளது. இராணிபேட்டை மாவட்டம். கலவை பேரூராட்சியை பொருத்தவரை 20 ஆண்டுகளுக்கு மேல் துப்புரவு பணியாளராக எஸ்.சங்கர் பணியாற்றி வருகிறார். அவர் 8 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சான்றிதழ் வைத்துள்ளார். எஸ்.சங்கர், துப்புரவு பணியாளர் அவர்கள் தனது செயல் அலுவலரிடம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சான்றிதழை அளித்து பணிப்பதிவேட்டில் பதவியேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொண்டும், இரண்டு மாதங்கள் கடந்தும் அவர் அதை செய்யவில்லை. கலவை பேரூராட்சியில் அனைத்து துப்புரவு பணியாளர்களும் எஸ்.சங்கருக்கு பதிவு உயர்வு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளனர். எஸ்.சங்கர் அவர்கள் துப்புரவு மேற்பார்வையாளராக பதவி உயர்வுக்கான விண்ணப்பமும் செயல் அலுவலரிடம் அளித்துள்ளார். ஆனால் கலவை பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் கலவை பேரூராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்களிடம் நாம் தனியாக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் துப்புரவு பணியாளர் பணியிடத்தை நிரப்பலாம் எனவும், பேரூராட்சி துறை இயக்குனர் அவர்கள் எனக்கு நண்பர், என்னை ஏதும் செய்ய மாட்டார் எனவும், புதிதாக அந்த பதவிக்கு ஒருவரை தேர்ந்தெடுத்தால் அந்தப் பதவியை ஏலம் விட்டு தற்போது அது 10 லட்சம் ரூபாய்க்கு வந்துள்ளதாக தெரிகிறது. அது சம்பந்தமாக அவர் மன்றத் தீர்மானம் போடச்சொல்லியும் அறிவுறுத்துள்ளார். அப்படி மன்ற தீர்மானத்தில் வைத்து துப்புரவு மேற்பணியாளர் பதவியை நிரப்பினாலும் அது செல்லாது. எனவே துப்புரவு பணியாளர் எஸ்.சங்கருக்கு காலியாக உள்ள துப்புரவு மேற்பார்வையாளர் பணியிடம் வழங்க உத்தரவிடும்படி வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் சமூக ஆர்வலர் கூறியிருந்தார்.