அரசுக்கு செலுத்த வேண்டிய வரி பணத்தை ஆட்டை போட்ட பில் கலெக்டர் அதிரடி சஸ்பெண்ட்

வரி வசூல் பணத்தை ஆட்டை போட்ட பில் கலெக்டர் அதிரடி சஸ்பெண்ட்

நெல்லை மாநகராட்சி ஆணையராக சிவகிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்ற நாளில் இருந்து மாநகராட்சிக்கு வர வேண்டிய வரியினங்கள், வாடகை பாக்கிகள் ஆகியவை தீவிரமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாளை மண்டலத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வரும் உதயகுமார் என்பவர் அப்பகுதியில் வரிபாக்கிகளை வசூலித்து வந்தார். பாளையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் அதன் உரிமையாளர் தான் செலுத்த வேண்டிய வரிபாக்கி ரூ.5 லட்சத்திற்கு அவரிடம் தொகையை மட்டும் எழுதி பிளாங்க் செக் கொடுத்துள்ளார்.இதனை பெற்றுக் கொண்ட பில் கலெக்டர் தனது அவசர தேவைக்காக தன்னுடைய பெயரை அதில் எழுதி வங்கியில் செலுத்தி பணத்தை எடுத்துள்ளார். இந்த விவரம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் மாநகராட்சிக்கு வர வேண்டிய வருவாயை அவர், கையாடல் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து பில் கலெக்டர் உதயகுமார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பணத்தை வசூல் செய்த பில் கலெக்டரே, வரி பணத்தை ஆட்டையை போட்டது மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது