கட்டு விரியன் பாம்புகள் ஏன் ஆபத்தானவை.?
கட்டு விரியன் பாம்புகள் ஏன் ஆபத்தானவை.?

"விதி முடிந்தவனைத்தான் விரியன் கடிக்கும்" என்பார்கள். காரணம் விரியன் கடிபட்டு பிழைப்பது கடினமாதலால் தான்.

கட்டுவிரியன்கள் இரவில் நடமாடும் பாம்பு வகை.
கட்டு விரியன் கருப்பு நிறத்தில் கன்னங்கரேல் என்று காணப்படும். இரவில் அதிகமாக நடமாடும். அதனால் இரவு நேரங்களில் கடிபடும் வாய்ப்புகள் அதிகம்.
பகலில் சீண்டப்படும் போது, தலை பாதுகாப்பாக இருக்கும் வகையில் தங்கள் உடலை பந்து போல் சுருட்டிக் கொள்கின்றன.
ஆக பகலில் இந்தப் பாம்புகள் சாதுவாக இருக்கின்றன. ஆனால் இரவில் சீண்டப்படும்போது மிகவும் மூர்க்கமாக எதிர்க்கும் குணம் இதற்கு உண்டு.
இவற்றின் நஞ்சு, நரம்பு மண்டலத்தைத் தாக்கும் நஞ்சு வகையைச் சேர்ந்தது.
தீண்டியவுடன் தசைகளைச் செயலற்றதாக்கி விடும். (விரியன் தீண்டியதை அறிந்துகொள்ள எளிய வழி)
பாம்பு கடித்தவுடன் ஏறத்தாழ 6-8 மணிநேரத்திற்குள் மரணம் ஏற்படலாம். (ஆட்களைப் பொறுத்து)
மூச்சு மண்டலம் செயலிழப்பதாலேயே பொதுவாக உயிரிழப்பு ஏற்படுகிறது.
மனிதர்களின் கால்தட அதிர்வினை உணர்ந்ததும் தீண்டுவதற்கு தனது தலையினைத் தயார்படுத்திக்கொள்ளும். அதன் தலைக்கு அருகில் மனிதக் கால் பதிகின்றபோது மிக ஆக்ரோசமாக தாக்கும் தன்மையுடையது.
இன்னொரு பிரச்சினை என்னவென்றால் அது கடித்ததையே நாம் அறியமாட்டோம்.
இதன் கடி ஒரு எறும்பு கடித்தது போலத்தான் இருக்கும். நாமும் கண்டுகொள்ளாமல் இரவு உறங்கச் செல்வோம். காலையில் மூச்சடைத்து இறந்திருப்போம்.
பாம்புகள் எதுவுமே யாரையும் தேடிச் சென்று தீண்டுவதில்லை. தான் சீண்டப்படும்போதோ அல்லது தனது வழியில் யாராவது குறுக்கிடும்போதோ தான் பாம்பு தன்னை மூர்க்கத்தனமான பிராணியாக மாற்றிக்கொள்கின்றது. இயற்கை உயிர்வாழ்தலில் அந்த மூர்க்கமானது பாம்பின் வாழ்வாதார நிலைகளில் முக்கியமான ஒன்றாகும்.

இந்தப் பாம்பிடமிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள, வயல்வெளிகள், புதர்கள், காடுகள், புல்வெளி ஆகிய இடங்களுக்கு இரவு நேரங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை அது போன்ற இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால், முழங்கால் அளவுக்கு பாதுகாப்பான காலணிகள், பெரிய மூங்கில் கொம்பு, டார்ச்(இரவு நேரங்களில்) தவறாமல் உடன் எடுத்து செல்ல வேண்டும்.