பயன்பாட்டிற்கு வராத மின் டிரான்ஸ்பார்ம் பயன்பாட்டிற்கு கொண்டு வர மின்வாரிய துறைக்கு போடிகமன்வடி கிராம மக்கள் கோரிக்கை
பயன்பாட்டிற்கு வராத மின் டிரான்ஸ்பார்ம் பயன்பாட்டிற்கு கொண்டு வர மின்வாரிய துறைக்கு போடிகமன்வடி கிராம மக்கள் கோரிக்கை 

திண்டுக்கல் மாவட்டம். ஆத்தூர் தாலுகா போடிகமன்வடி ஊராட்சி சொக்கலிங்கபுரம் கிராமத்தில் மின் பற்றாக் குறையின் காரணமாக புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு பல மாதங்களாகியும் சித்தையன்கோட்டை உதவி மின் பொறியாளரின் அலட்சியத்தால் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது சொக்கலிங்கபுரம் கிராம மக்களால் பலமுறை உதவி மின் பொறியாளரிடம் முறையிட்டும் எந்த ஒரு முயற்சியும் அவர்களால் எடுக்கப்படவில்லை ஆகவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக அந்த டிரான்ஸ்பார்மர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து மக்களின் குறைகளைத் தீர்த்து வைக்குமாறு சொக்கலிங்கபுரம் கிராம மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட நிருபர் அங்கு ராஜ்.