திண்டுக்கல்: குட்கா விற்பனை செய்த வாலிபர் கைது
திண்டுக்கல்லில் குட்கா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்லில் குட்கா விற்பனை செய்வதாக ஐஜி. தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் அழகு பாண்டி மற்றும் காவலர்கள் பாறைப்பட்டி பகுதியில் நடத்திய சோதனையின் போது குட்கா விற்பனை செய்த ராஜ்குமார் (44) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட 10 கிலோ குட்காவை பறிமுதல் செய்து நகர் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து நகர் தெற்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்
.

திண்டுக்கல் மாவட்ட நிருபர் அங்கு ராஜ்.