பல லட்ச ரூபாயை மக்கள் வரிப்பணத்தை ஸ்வாஹா செய்யும் விண்ணம்பள்ளி ஊராட்சி செயலாளர் சரவணனை காப்பாற்ற துடிக்கும் கி.ஊ பிடிஒ ரகு
வேலூர் மாவட்டம்,காட்பாடி ஊராட்சி ஒன்றியம், விண்ணம்பள்ளி ஊராட்சியில், ஊராட்சி செயலாளராக எம்.சரவணன் என்பவர் தனது சொந்த கிராமத்திலேயே 15 வருட காலமாக பணிபுரிந்து வருகிறார். இதனால் தனது கிராம மக்களின் நாடித்துடிப்பை அறிந்ததால் பி.டி.ஒ.(ஊராட்சி) டெப்டி பி.டி.ஒ, ஓவர்ஸி ஆகியோர் ஒத்துழைப்போடு மக்கள் வரிப்பணத்தில் போலி ஆவணங்கள் மூலம் அனைத்து வகையிலும் ஊழல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.கடந்த
5, வருடங்களுக்கு முன்னாள்
சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஒ.(ஊராட்சி) விடம் ஐந்து கிராம மக்கள் ஊராட்சி செயலாளர் சரவணன் மீது ஊழல் புகார் கொடுத்ததின் பேரில் விசராணை நடந்தது. அதிகாரிகள் கூட்டுக்கொள்ளை என்பதால் சரவணன் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் காப்பாற்றி விட்டனர். ருசி கண்ட பூனை மீண்டும் திருந்தவில்லை முறைகேடுகளை சரவணன் தொடர்ந்து செய்து வருவே ஊழல் புகார்களை கிராம மக்கள் அனைத்து ஆதாரங்களுடன் புகார் மனு கொடுத்தனர். இதன் பேரில்
2.8.2022 அன்று பிற்பகல் 1மணி அளவில் காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விசராணை நடந்தது.விசாரணை அதிகாரியான ஊராட்சி உதவி இயக்குனர் (AD) ராமகிருஷ்ணன் மற்றும் காட்பாடி பி.டி.ஒ.(கிராம ஊராட்சி) ரகு ஆகியோர் விண்ணம்பள்ளி ஊராட்சி செயலாளர் எம்.சரவணன் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. சரவணன் கட்டிய அரசு புறபோக்கு வீட்டுக்கு சேர்காட்டில் நடைபெறும் மனுநீதி நாளில் பட்டா வேண்டி மனு அளித்துள்ளார் . விசராணையில் பட்டா இல்லை என்று தாலூக்கா அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஊராட்சி செயலாளர் சரவணன்
100-நாள் திட்டத்தில் முறைகேடுகள் செய்து போலி ஆட்கள் மூலம் பெற்ற வங்கி பண பரிவர்த்தனை நகல்கள்
வங்கிலிருந்து அவர்க்கு அனுப்பட்ட பரிவர்த்தனை நகல் அதிகாரிகளிடம் ஆதாரப்பூர்வமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சரவணன் தனது தாய் தனது பாட்டி அரசு பணியில் உள்ள தனது சகோதிரிக்கும் சட்டத்துக்கு விரோதமாக அரசு வீடு வழங்கும் திட்டத்தில் வீடு வழங்கியுள்ளார். இதன் நகல்களும் அதிகாரிகளுக்கு அளித்தும் நடவடிக்கை இல்லை என்கிறார். மக்கள் வரிப்பணத்தில் அதிகாரிகள் துணையோடு பல்வேறு முறைகள் செய்து பல லட்சக்கணக்கில் சொத்து சேர்த்த ஊராட்சி செயலாளர் சரவணன்கொடுத்த லஞ்சப் பணத்தை வாங்கிக் கொண்டு அவரை அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர் என்கின்றனர் விண்ணம்பள்ளி மக்கள்