இதுவரை சொன்ன காரணமே இல்லை.. டைனோசர் இனம் அழிந்தது எப்படி.. வெளியான புதிய தகவல்கள்!
வாஷிங்டன்: 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் மீது பெரிய விண்கல் மோதியதால் தான் டைனோசர்கள் இனம் அழிந்ததாக கருதப்படும் நிலையில், அதற்கு முன்பே டைனோசர் இனம் வீழ்ச்சியை சந்திக்க தொடங்கியிருப்பதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்து வந்த உயிரினங்களில் ஒன்று டைனோசர். ஆனால் இந்த உயிரினம் முற்றிலும் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரிய உயிரினமான டைனோசர் விண்வெளியில் இருந்து பூமியில் விழுந்த பெரிய விண்கல் காரணமாக இந்த இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாக விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்பட்டது.
டைனோசர் இனம் இருந்ததா?
உண்மையில் டைனோசர் இனம் இருந்ததா? என்பது குறித்து தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு இருக்கின்றனர். இதற்காக தற்போது டைனோசர் பூமியில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் மற்றும் தடயங்களை திரட்ட விஞ்ஞானிகள் குழுவினர் முழு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவ்வப்போது டைனோசரின் கால் தடங்கள் மற்றும் முட்டைகளின் படிமங்கள் கிடைத்துள்ளதாகவும் அதை வைத்து விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபடுவதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளன.
66 மில்லியன் ஆண்டுக்கு முன்பு
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட சீனாவின் ஜாங்ஜியாகோவ் மாகாணத்தின் சில இடங்களில் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக சொல்லப்படும் டைனோசர்களின் கால் தடம் தென்பட்டுள்ளாதாக ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில், விண்கல் பூமியை தாக்குவதற்கு முன்பே டைனோசர் இனங்கள் அழியத்தொடங்கி விட்டதாக சீன விஞ்ஞானிகள் புது தகவலை வெளியிட்டுள்ளனர்.
150 மீட்டர் தடிமன் கொண்ட பாறை
சீன அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சியாளர்கள், மத்திய சீனாவில் உள்ள ஷான்யாங் படுகையில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதைபடிவ டைனோசர் முட்டைகள் மற்றும் முட்டை ஓடுகளை எடுத்து ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 150 மீட்டர் தடிமன் கொண்ட பாறை அடுக்குகளில் இந்த புதைபடிவங்கள் எடுக்கப்பட்டவையாகும். இந்த பாறைகளின் லேயர்களை கொண்டு எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று கணிணியின் உதவியோடும் விரிவான ஆய்வை மேற்கொண்டனர்.
விண்கல் பூமியின் மீது மோதுவதற்கு முன்பே
இதற்காக சுமார் 5,500 புவியியல் மாதிரிகளை கொண்டு இந்த ஆய்வுகள் செய்யபட்டன. இதன் மூலம் கிடைத்த தரவுகளின் படி, விண்கல் பூமியின் மீது மோதுவதற்கு முன்பாகவே டைனோசர்களின் இனம் வீழ்ச்சியை சந்தித்து தெரியவந்து இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். புவியில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் மற்றும் பெரிய எரிமலை வெடிப்புகள் போன்றவற்றால் டைனோசர் இனங்கள் சரியத்தொடங்கியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்களின் வாதமாக உள்ளது.
டைனோசர் இனம் அழிந்தது எப்படி.. வெளியான புதிய தகவல்கள்!
• Bharathaidhazh