மக்கள் வரிப்பணத்தை சுருண்டி சுகபோக வாழ்க்கை நடத்தும் விளாப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் முத்து எப்போது கைது
மக்கள் வரிப்பணத்தை சுருண்டி சுகபோக வாழ்க்கை நடத்தும் விளாப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் முத்து

இராணிப்பேட்டை மாவட்டம், விளாப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலராக இருப்பவர் முத்து இவர் மக்கள் வரிப்பணத்தை போலிபில் போட்டு எப்படி கொள்ளை அடிக்கலாம் என்று தனியாக பாடம் படித்துவிட்டு வந்திருப்பார் போல் தெரிகிறது என்கின்றனர் விவரமறிந்தவர்கள். இவர் தெருவிளக்கு பழுது ஏற்பட்டுள்ளது. போர் ரிப்பேர் ,பீளிச்சிங்பவுடர், பெனாயில், சுண்ணாம்பு வாங்கியது, விளக்கமாறு வாங்கியது,கொசு மருந்து புகையடித்தல் என இதர செலவு கணக்கில் தினமும் ரூ.10,000 வரை சுருட்டி வருவதாக கூறப்படுகிறது. வீட்டுமனை கட்ட பிளான் அப்ரூவல் வழங்குவதற்கு வீடுகளுக்கு ஏற்ப ரூ.10,000 முதல் 50,000 வரை லஞ்சம் வாங்குவதாக வீடுகட்ட அப்ரூவல் வாங்கியவர்கள் கூறுகின்றனர். அதேபோல் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களிடம் பிளாட்டுக்கு ஏற்ப 1லட்சம் முதல் 2லட்சம் வரை அல்லது தனக்கு 1பிளாட், சீப்பர் இந்திரநாத்துக்கு 1பிளாட்டு என லஞ்சமாக வாங்கிகொண்டு அனுமதிதருவதாக மக்கள் மத்தியில் சொல்லப்படுகிறது. விளாப்பாக்கம் பேரூராட்சியில் ஒரு சிலர் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளதாகவும் இதுகுறித்து செயல் அலுவலர் முத்துவிடம் புகார் தெரிவித்தும் அவர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி இராணிப்பேட்டை கலெக்டரிடம் சமூக ஆர்வலர்கள் மனு அளித்துள்ளனர். செயல் அலுவலர் முத்து கள்ளக்குறிச்சி மாவட்ட பேரூராட்சிகளில் பணியாற்றியப்போதே பல்வேறு புகார்கள் கூறப்பட்டுவந்த நிலையில் ஏற்கனவே இதே பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த சம்பத்குமார் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பதவி உயர்வு பெற்று சென்றார். அவரது ஆலோசனை பேரிலேயே பேரூராட்சி அதிகாரிகளுக்கு பல லட்சம் லஞ்சம் கொடுத்து இங்கு வந்ததாக பேரூராட்சி வட்டாரத்தில் அப்போது பேசப்பட்டது. இந்த நிலையில் பேரூராட்சிகளின் முறைகேடுகளை ஆதாரபூர்வமாக வெளிச்சத்துக்கு கொண்டுவரும் சமூக ஆர்வலர் ஒருவர் மேற்கண்ட பல்வேறு தகவல்களை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டப்படி தகவல்கள் கேட்டு 3, மாதமாகியும் பதிலளிக்காமல் போகவே மேல்முறையீட்டு அலுவலரான வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜிஜாபாய்க்கு விண்ணப்பித்துள்ளார். அவரும் கடந்த 1,மாதமாகியும் பதில் அளிக்காமல் கிடப்பில் போடவே சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநருக்கு புகார் மனு எழுத்துப்பூர்வமாக அனுப்பியுள்ளார் அவர். சமூக ஆர்வலர் ஒருவர் கூறும் போது பேரூராட்சியின் முறைக்கேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தார். செயல் அலுவலர் முத்தோ சில வருடங்களாக பணியாற்றிவருகிறார் ஆனால் மேற்கண்ட தகவல்களை குறித்து யாராவது கேட்டால் பேரூராட்சி மன்ற தீர்மானங்கள்படியே நிர்வாகம் செயல்படுகிறது. மேற்கொண்டு நீங்கள் ஏதாவது கேட்பதாக இருந்தால் தலைவரை கேளுங்கள் என்கிறாராம் செயல் அலுவலர் முத்து.இவருக்கு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஆற்காடு ஈஸ்வரப்பா பக்க பலமாக இருந்து வருவதால்தான் செயல் அலுவலர் முத்துக்கு இவ்வளவு தெரியும் என்கின்றனர் பேரூராட்சி மக்கள்.