மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் இயக்குனர் அறிவித்துள்ள தேர்வுக்கு இலவச பயிற்சி.!
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக வேலைவாய்ப்பு துறை இயக்குனர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 20 ஆயிரம் பணியிடங்களுக்கு தேர்வு அறிவித்துள்ளது.

இதற்கு www.ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அக். 8 விண்ணப்பிக்க கடைசி நாள்.

இத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் பாடக்குறிப்புகள் அரசின் வேலைவாய்ப்பு துறை
tamilnaducareerservices.tn.gov.in
என்ற மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இளைஞர்கள் இணையதளத்தில் பதிவு செய்து அனைத்து அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களைப் பதிவிறக்கம் செய்து படித்து பயன் பெறலாம்.

மேலும் கல்வித் தொலைக்காட்சி வழியாக பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பயிற்சி வகுப்புகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் போன்ற நிகழ்ச்சிகளை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7:00 முதல் 9:00 மணி வரை காணலாம். இரவு 7:00 முதல் 9:00 மணி வரை மறு ஒளிபரப்பு செய்யப்படும்.

அதேபோல் 'TN Career Services Employment' என்ற 'யுடியூப் சேனலில்' பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. 

அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் செயல்படும் தன்னார்வ வட்டங்களில் இலவச பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்