நாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதி.?
வேலூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலத்திற்கு உட்பட்ட ஒன்று இரண்டு மூன்று வார்டுகளில்  நாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதியடைய நேரிட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்துக்கு உட்பட்டது 1, 2, 3 வார்டு செங்குட்டை பகுதிகளில் தெருக்களில் நாய்கள் தொல்லையால் பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அவதியடைய நேரிட்டுள்ளது. வேலூர் மாநகராட்சி மண்டலம் 1வது செங்கோட்டை பகுதிகளில் தெரு அருகே நாய்கள் கூட்டம் கூட்டமாக   காணப்படுகிறது. அவ்வழியாக வாகனங்களில் வருபவர்களை நாய்கள் துரத்துகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கீழேவிழும் நிலை ஏற்படுகிறது. நாய்களை பிடிக்க வேலூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்