திண்டுக்கல். தேங்காய் ஓடு கரி ஆலைகள், விதியை மீறியதால்
திண்டுக்கல் மாசுக்கட்டுப்பாடு உதவி பொறியாளர் உதயா மற்றும் அதிகாரிகள் பழனி அருகே மேல்கரைப்பட்டி, முத்துநாயக்கன்பட்டி பகுதிகளில் ஆய்வு செய்ததில் 8 தேங்காய் ஓடு கரி ஆலைகள், விதிமுறையை மீறி நிலத்துக்கு அடியில் தொட்டி அமைத்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அந்த ஆலைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். மேலும் வரும் நாட்களில் விதி மீறி இதுபோன்று ஆலைகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். 


திண்டுக்கல் மாவட்ட நிருபர் அங்கு ராஜ்