லஞ்சத்தில் மிதக்கும் ஊத்துக்குளி காவல் நிலையம் மது , சூது வசூல் வேட்டையில் காவல் ஆய்வாளர்.?

லஞ்சத்தில் மிதக்கும் ஊத்துக்குளி காவல் நிலையம் 
மது , சூது வசூல் வேட்டையில் காவல் ஆய்வாளர்.?
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ஐந்து நிர்வாக மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய இவ்வைந்து மண்டலங்களும் மண்டல மேலாளர்களின் தலைமையில் நிர்வகிக்கப்படுகின்றன. இவை மேலும் 33 வருவாய் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டமும் ஒரு மாவட்ட மேலாளரின் கீழ் இயங்குகின்றது. தமிழகத்தில்  திருப்பூரில் மட்டும் ஆண்டுக்கு  பல கோடிக்கு மது விற்பனை நடைபெறுகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் திருப்பூர் நகரத்தில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு மதுக்கடை வீதம் உற்சாகமாக  பார்களும் இயங்குகிறது.

 தமிழகத்தில், திருப்பூர் சற்று வித்தியாசமான நகரம். டாலர் சிட்டி, பனியன் சிட்டி, குட்டி ஜப்பான் என்ற அடைமொழிகளுடன் 'டாஸ்மாக் சிட்டி' என்றும் இதனை அழைக்கலாம். திருப்பூர் மாவட்டத்தில் தற்போது 201 மதுக்கடைகள் இயங்கிவருகின்றன. அதில், 150-க்கும் மேற்பட்ட  பார்கள் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் உள்ளன. நாள் ஒன்றுக்கு ரூ. 5 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெறுகிறது. பண்டிகை மற்றும் விழாக்காலங்கள், மதுக்கடைகளுக்கான விடுமுறை நாட்களுக்கு முந்தைய தினங்களில் திருப்பூரில் நடைபெறும் மது விற்பனை பற்றிச் சொல்லவே வேண்டாம். புத்தாண்டு, தீபாவளி போன்ற கொண்டாட்டத் தினங்களில் மற்ற எந்த மாவட்டத்தையும்விட திருப்பூர்  தான் மது விற்பனையில் சாதித்துக் காட்டியிருக்கிறது. காஞ்சிபுரம், சென்னை நகரங்கள்கூட திருப்பூருக்குப் பிறகுதான்.  

திருப்பூர் நகரின் மொத்த பரப்பளவு 159 சதுர கி.மீதான். ஆனால், வெளிமாநில, வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பனியன் தொழிலாளர்களை இலக்கு வைத்துத்தான் டாஸ்மாக்  இப்படிச் சகட்டுமேனிக்குக் கடையை விரிவுபடுத்தியிருகிறது. இந்த நகரைப் பொறுத்தவரை ஆண், பெண் என எல்லோரும் வேலைக்குச் செல்வார்கள். தாறுமாறாகப் பணப்புழக்கம் கொண்ட நகரம். வாரம் முழுக்க உழைப்பார்கள். சனிக்கிழமைகளில் சம்பளம் வழங்கப்படும். பெரும்பாலான நிறுவனங்களில் வாரச் சம்பளம். இரு நாட்களும் உற்சாகம்தான். பெண்களிடையேகூடத் தாராளமாகப் பணம் புழங்குவதால், பொருளாதாரரீதியாக ஆண்களைச் சார்ந்து இருப்பதில்லை. அதனால்,சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டைப்பற்றி யோசிக்காத மதுப்பிரியர்கள் நிறைந்த நகரமாக இருக்கிறது .


___

திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக் குளியில் காவல் ஆய்வாளரும்
பார் உரிமையாளருமான கள்ள லாட்டரி விற்பானையாளரும் கூட்டு கொள்ளை கண்டு கொள்வார்களா டாஸ்மாக் உயர் அதிகாரிகளும்் காவல் துறை உயர் அதிகாரிகளும் ?



திருப்பூர் ஊத்துக்குளி பகுதிகளில்  உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட  பார்கள் உள்ளது. . பார்களிலிருந்து மாமூல் வசூலித்து தருவதற்காகவே.. ஊத்துக் குளி பகுதிகளில்  கல்ல லாட்டரி விற்பனையாளரை  காவல் ஆய்வாளர் நியமித்துள்ளார். 

காவல் ஆய்வாளர் நியமித்தவர் யார்  என விசாரித்த போது
 காவல்துறையை கையுக்குள் வைத்து கொண்டு ஊத்துக் குளியில் தனக்கென்று ஒரு ரெஸ்ராரண்ட் வைத்துக் கொண்டு
தடை செய்த லாட்டரி விற்பனைகளை  அவருக்கு விசுவாசமான இருவர் மூலம் 30 கை ஆட்களை வைத்து நடத்தி வருகிறாராம். 

மேலும் பார் திறப்புக் கிற்கு  பார் உரிமையாளரிடம் ரூ70 ஆயிரம் ரூபாயும் மாதம், மாதம் 30 ஆயிரம் ரூபாயும் சில பார்களில் தினசரி வசூலாக 1000 ரூபாயும் காரராகவும் வாங்கி வருகிறாராம்
காவல் ஆய்வாளர் .

 மேலும் மொத்த  வசூல் செய்வதில் ஒரு கணிசமான தொகையை சதவீத அடிப்படியில் மாதம் தோறும் உயர் காவல்அதிகாரிகளுக்கு கொடுத்து வருகிறாராம்
காவல் ஆய்வாளர்
மேலும் அனுமதி இல்லாத பார்களில் வசூல் செய்யும் பணத்தை கள்ள லாட்டரி விற்பனையாளரும் காவல் ஆய்வாளரும்  சரி பாதியாக பிரித்து கொள்கிறார்களாம். என தகவல் வந்த வண்ணமே உள்ளது. 
இது ஒரு பக்கம் இருக்க ஒரு பார் உரிமையாளரிடம் எப்படி மாதம் இவ்வளவு  லஞ்சம் கொடுத்து பார் நடத்துறிங்க என கேட்ட போது :-
  டாஸ்மாக்  கடை திறந்தாலும், திறக்கா விட்டாலும் பாரில் சுமார் ஒரு நாள் ஒன்றுக்கு 500 பாட்டில் வீ தம்,  மாதம் 15,000 மது பாட்டில்கள் விற்பனை ஆகுகிறது. மேலும் பார் உள்ளேயே தமிழக அரசால் தடை செய்த லாட்டரி விற்பனையும் நடைபெறுவதாலும் டாஸ்மாக் அலுவலகத்தில் இருந்து  டாஸ்மாக்  கடைகளுக்கு  எம்.ஆர்.பி. விலை என்னவோ அதே விலைக்கே எங்களுக்கும் தருகிறார்கள். அதை வாங்கி பாட்டில் ஒன்றுக்கு பாட்டில் விலையை விட மேலும் 70-ரூபாய் சேர்த்து  விற்பனை செய்து வருவதால் நாள் ஒன்றுக்கு 35,000 வீதம் மாதம் சுமார் 10 லட்சத்திற்கும் மேல் டாஸ்மாக் கடையை விட பார்களுக்கு  வருமானம் வருவதால் காவல் ஆய்வாளருக்கு மாதம் 3லட்சம் கொடுப்பது  பெரிதாக தெரியவில்லையாம்

 இந்த பணத்தை யார்..? யார்..? வாங்குகிறார்கள் என்று கேட்டதற்கு

 திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில்  மது விளக்கு போலீஸ் மற்றும் அந்தந்த பகுதி காவல் நிலையத்திற்கும் மாதம் மாதம் கொடுத்துதான் பார் மட்டும் லாட்டரி நடத்தி வருகிறார்களாம் மேலும் இட வாடகை எங்களிடம் வேலை செய்யும் ஆட்களுக்கு கல்லாவில் இருப்பவருக்கு (கேஷ்யர்) நாள் ஒன்றுக்கு 400 ரூபாயும், கள்ளத்தனமாக மது மற்றும் லாட்டரி விற்பனை செய்பவருக்கு மூன்று வேலை சாப்பாட்டுடன், நாள் ஒன்றுக்கு 500ரூபாய் கொடுப்பதாகவும், அந்தந்த பகுதி காவல் நிலையங்களுக்கு கேஸ் பிடிக்க வேண்டும் என்பதற்காக காவலர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மாதத்திற்கு ஒரு முறை  கள்ளத்தனமாக மது மற்றும் லாட்டரி விற்பனை ஆட்களை அனுப்பி வைத்து. அபதாரம் கட்டி ஜாமீனில் அழைத்து வந்து விடுவார்களாம்  

ஆகா மொத்தம் குடிமகன்களின்  இன்றைய  நிலை எந்த அட்சி வந்தாலும்.
 கையிலா வாங்கினேன்..!! பையில போடல..!! காசு போன இடம் தெரியல..!! என  மது கடை மற்றும் லாட்டரி கடை முன்னே குடிபோதையில் ஆடுகின்ற நிலை தான் ஊத்துக் குளியில் அதிகரித்து விட்டது