ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.53,கோடி மதிப்பில் கட்டப்பட்ட வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு.?

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.53,கோடி மதிப்பில் கட்டப்பட்ட வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு.?


வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்  புதிய
 பேருந்து நிலையம் ரூ. 53,கோடியில் கட்டப்பட்டுபயன் பாட்டுக்கு வந்துள்ளது. தற்போது மழை பெய்தாலே ஒழுங்குகின்ற நிலையில் உள்ளது.மேலும் இங்கு உள்ள கழிவறைகள் பராமரிப்பின்றி, பழுதடைந்து காணப்படுகிறது.  பேருந்து நிலையம் வரும் மக்கள் கழிப்பறைகள் பழுதடைந்துள்ளதால் அவசர தேவைக்காக இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு கூட இடமில்லாமல் போகவே பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளை கழிவறையாகவும், சிறுநீர் கழிக்கும் இடமாகவும் மாற்றியுள்ளனர்.   பழுதடைந்துள்ள கழிவறைகளை மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்காமல் மெத்தனமாக இருந்து வரும் காரணத்தினால் பேருந்து நிலையம் சுகாதார சீர்கேடாக காட்சியளிக்கிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் சுகாதாரமான முறையில் கழிப்பறை வசதிகளையும், அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்கின்றார் சமூக ஆர்வலர் ஒருவர்.எனவே மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா அல்லது  கண்டும் காணாமல் இருக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.