நில அளவையாளர்களும் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூபாய் 5000 முதல் 10 ஆயிரம் வரை கையூட்டுகள் கேட்பதாக பொதுமக்கள் புகார்
கடலூர் மாவட்டம். குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் கவனத்திற்கு செல்கின்றதா என கேள்வியும் எழுப்புகின்றனர் பொதுமக்கள்
வருவாய்த் துறையையும் நில அளவையாளர்களையும் வட்டமிடுமா கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீரென சோதனை செய்தால் பல வருவாய் அதிகாரிகள் சிக்கக் கூடும் நிலை ஏற்படலாம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்
கடலூர் மாவட்டம். குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள வருவாய் அலுவலகங்கள் ராஜா தியேட்டர் அருகில் இயங்கி வருகின்றன. இதில் குறிஞ்சிப்பாடி வட்டத்திற்குட்பட்ட 51 ஊராட்சி கிராமங்கள் உள்ளன இதில் பொதுமக்கள் தனது கணவனையோ குடும்பத்தைச் சார்ந்தவரையோ பறிகொடுத்து இழந்து விடுகின்ற நிலையில் பல்வேறு காரணங்களுக்காக வாரிசு சான்று. சாதி சான்று. வருமான சான்று. ஒருங்கிணைந்த சான்று. உறவுமுறை சான்றிதழ் என அரசு இ-சேவை மையம் முலம் ஆன்லைனில் பதிவு செய்து அதை எடுத்துக்கொண்டு வருவாய் அலுவலகத்துக்கு சென்றால் ரூபாய் 2000 முதல் 5000 வரை மறைமுகமாக கையூட்டுகள் கேட்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வாரிசு சான்று ஆன்லைனில் பதிவு செய்தவுடன் வருவாய் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மனுதாரர் ஒரு வீட்டுக்குச் சென்று விசாரித்து உண்மைத்தன்மையை அறிந்து உண்மையாக இருந்தால் வாரிசு சான்று 30- நாட்களுக்குள் வழங்க வேண்டும். ஆனால் அவர்கள் மனுதாரரின் வீட்டிற்கு செல்லாமல் அலுவலத்திற்கே வரவழைத்து விசாரணை செய்யும் பொழுது சில சிறு சிறு கேள்விகளை எழுப்பி அவர்களை பயமுறுத்தி அலகழித்து அனுப்பி விடுகின்றனர். இந்நிலையில் படிப்பறிவின்றி தவிக்கும் பாமர மக்கள் வாரிசு சான்று அவசியம் தேவைப்படுவதால் வேறு வழியின்றி அண்டா குண்டா மூக்குத்தி தோடு உள்ளிட்டவளை அடகு வைத்து வருவாய்த்துறை அதிகாரிகள் கேட்கும் பணத்தை கையூட்டுகள் கொடுத்து வாரிசு சான்று வாங்கும் நிலை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். நமக்கு ஏதாவது பின்னாடி சிக்கல்கள் ஏற்படுத்தி விடுவார்களோ என பயந்து இதை வெளிப்படுத்த முடியாமல் மனதிற்குள்ளே பூட்டி வைத்து புழுங்கி வருகின்றனர் மக்கள் அதுபோன்று பட்டா மாறுதல் செய்வதற்கு ஆன்லைனில் பதிவு செய்துவிட்டு நில அளவையாளர்களை தொடர்பு கொள்ளும் போது ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி பல மாதங்கள் அலகழித்து பதிவு செய்தவர் நொந்து நூலாகி அதன் பிறகு ரூபாய் 5000 முதல் இடத்தின் அளவைப் பொறுத்து அதன் பிறகு ஆயிரக்கணக்கில் மேலே ரூபாய் ஏறிக்கொண்டே போகும் அதன்படி கையூட்டுகள் பெற்றபிறகு பல மாதங்களாக அலைந்து திரிந்து பட்டா மாறுதல் கேட்ட மனுதாரருக்கு பட்டா கொடுக்கின்றனர். கேட்ட பணத்தை கொடுப்பவருக்கு உடனடி பட்டா பணம் கொடுக்காதவருக்கு அலகழித்து அவரது மனுவை தள்ளுபடி செய்கின்ற அவல நிலையும் தொடர்ந்து அரங்கேரி வருகின்றன. இதுபோன்று சில மாதங்களுக்கு முன்பு நில அளவையாளர் கையூட்டுகள் பெற்று பட்டா கொடுப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு நில அளவையாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட இருவரையும் கைது செய்தது அனைவரும் அறிந்ததே அதன்பிறகு தற்போது வந்துள்ள நில அளவையாளர்களும் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக பரவலாக சாதாரண பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால் பொதுமக்கள் கூறும் பதிவு என்னவென்றால் லஞ்சம் இல்லாமல் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை மட்டும் செலுத்தியவுடன் சாதாரண பொது மக்களுக்கு வாரிசு சான்றுகளும் பட்டா மாறுதல் சான்றுகளும் அரசு விதிமுறைகள் படி உள்ள குறிப்பிட்ட நாட்களுக்குள் கிடைக்க உதவி புரிய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதையும் மீறி நடந்தால் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை தனிக்கவனம் செலுத்தி தானாக முன்வந்து லஞ்சத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் வைக்கின்றனர்