நகை கடன் பெற்ற சுமார் 1 லட்சம் பேர் உறுதிமொழி பத்திரம் வழங்கினால் அவர்களுக்கும் நகை கடன் தள்ளுபடி
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகை கடன் பெற்ற சுமார் 1 லட்சம் பேர் உறுதிமொழி பத்திரம் வழங்கினால் அவர்களுக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் - அமைச்சர் ஐ.பெரியசாமி

சுமார் 14 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் வைத்து தற்போது வரை நகை கடனுக்கான உறுதிமொழி பத்திரம் கொடுக்காததால் அவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. இவர்கள் உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் அவர்களுக்கும் நகை கடன்  தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.


திண்டுக்கல் மாவட்ட நிருபர் அங்கு ராஜ்