பேரணாம்பட்டு உதவி தொகை பெரும் முதியோர்களை ஆபாசமாக பேசும் சமூக நல திட்ட பாதுகாப்பு தாசில்தார் விநாயகமூர்த்தி.
வேலூர், பேரணாம்பட்டு தாலுகாவில் சமூக பாதுகாப்பு பிரிவு இயங்கி வருகிறது இதில் வட்டாட்சியராக வேலூர் சென்பகத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார் இவர் காட்பாடி தாராப்படவேட்டில் வருவாய் ஆய்வாளராக இருக்கும் பொழுது முதல் இன்று வட்டாட்சியர் வரை பணம் வாங்காமல் எந்த வேலையும் செய்ய மாட்டார் மேலும் மது போதையில் தான் எப்போதும் இருப்பார் என்ற தகவல் சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட பெரும்பாலான அரசு வழங்கக்கூடிய உதவித்தொகை பெறும் முதியோர்களுக்கு திடீரென்று உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது இது குறித்து பாதிக்கப்பட்ட முதியோர்கள் சமூக நலத்திட்ட தாசில்தாரர் விநாயகமூர்த்தியிடம் சென்று கேட்டபோது,
ஐயா எங்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது என்ன காரணம் என்று கேட்டால் சனியன்களா வெளியே போங்கள் மேலிடத்திலேயே அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது நீங்கள் ஏதாவது கேட்க வேண்டுமென்றால் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் சென்று கேளுங்கள் என்றும் தகாத வார்த்தையில் ஏசியுள்ளார் இதனால் பாதிக்கப்பட்ட உதவி தொகைை பெரும் முதியோர்கள் உதவிக்காக நிறுத்த வைக்கப்பட்டுள்ளது.
இன்பதற்கான காரணத்தை கேட்க சென்றால் தாசில்தார் விநாயகமூர்த்தி முதியோர்கள் என்று கூடப் பாராமல் கீழ் தரமான தகாத வார்த்தைகளால் பேசி வெளியே போங்கள் என்ற படியெல்லாம் விரட்டி அடிப்பதாக முதியோர் உதவித் தொகை பெறும் பயனாளிகள் தரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயனாளிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் எம்ஜிஆர் நகர் புதிய லைன் போன்ற பகுதிகளில் முதியோர் உதவித் தொகைகளை வழங்கும் சாருமதி என்பவர் சரியான தேதிக்கு முதியோர்களுக்கு உதவி தொகைகளை வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது. சாருமதி போன்று மற்ற அலுவலர்கள் சுரேஷ். பாஸ்கரன். சுகைல் அஹமத். குட்டி பாபு. பாலா சிங். போன்றவர்கள் எல்லாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் தேதி தொடங்கி ஐந்தாம் தேதி ஆறாம் தேதிக்குள்ளாக முதியோர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் விதவைகளுக்கும் முதிர் கண்ணிகளுக்கும் உதவித்தொகைகளை கொடுத்து முடித்து விடுகின்றனர். ஆனால் சாருமதி என்பவர் வராமல் அவரது கணவரான தபால் ஆபீஸ் ஊழியர் முரளி என்பவரை அனுப்பி உதவித்தொகை கொடுக்கிறார் முரளி அதிகார துஷ்பிரயோகம் செய்யும் வகையில் எத்தனையோ ஏழை தாய்மார்களின் உதவித்தொகைகளை கையாடல் செய்திருப்பதாகவும் நேரத்திற்கு உதவி தேவைகளை வழங்காமல் ஒவ்வொரு மாதமும் 20. 25 ஆம் தேதிக்கு பிறகு பயனாளிகளுக்கு உதவித்தொகைகளை வழங்குவதாகவும், பயனாளிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
மேலும் வக்கால பள்ளி தபால் நிலையத்தில் வேலை செய்யக்கூடிய முரளி அவரது மனைவி சாருமதியின் பணியான உதவித் தொகைவழங்க வந்து விடுவதால் நேரத்துக்கு தபால்கள் கிடைக்காமல் சின்னதாமல் செருவூ பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிக்க ஆளாகியுள்ளனர்.
பேரணாம்பட்டு தாதா தெருவில் சாருமதியின் கணவர் முரளி முதியோர் உதவித் துறைகளை கையாடல் செய்துவிட்டு பொது மக்களிடம் உதை வாங்கிய சம்பவம் இன்றுவரை பேரணாம்பட்டு பட்டு பொதுமக்கள் மறந்திருக்க மாட்டார்கள். மேலும் 23.8. 2022.அன்று பத்திரிகையாளர் ஆகிய நான் (கதிரேசன் பத்திரிகை யாளர்) தங்களிடம் முறையிட்டேன்.
சமூக நல த்திட்ட பாதுகாப்பு தாசில்தாரர் விநாயகமூர்த்தியிடம் சென்று சாருமதி பற்றியும் அவரது கணவர் முரளி கையாடல் செய்திருப்பதை பற்றியும் கடந்த மாதங்களுக்கு செய்தி அனுப்பி இருந்தேனே தாங்களும் நடவடிக்கை எடுப்பதாக சொன்னீர்களே ஏன் நடவடிக்கைஎடுக்கவில்லை என்று கேட்டிருந்தேன்.
அதற்கு மறந்து விட்டேன் என்று விநாயகர் மூர்த்தி பதில் கூறியுள்ளார் இன்று வரை புதிய லைன் பகுதிக்கு முதியோர் உதவி தொகை வழங்கப்படவில்லை அதனால் தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மாதமே தங்களிடம் நான் கூறி இருந்தேன் இந்த மாதமும் அப்படியே தான் செய்திருக்கிறார்கள் நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறீர்கள் என்று கேட்டிருந்தேன்.
விநாயகமூர்த்தி முதியோர் உதவி தொகை பெறாத முதியவர்களை அழைத்து நேரில் அழைத்து வாருங்கள் என்று கூறியுள்ளார் அந்த பத்திரிகையாளரும் (கதிரேசன்) தேதி 23 ஆம் தேதி முதியோர் தொகை வழங்கப்படாத முதியவர்களை நேரில் அழைத்துச் சென்றுள்ளார். உடனே சாருமதியை தாலுக்கா அலுவலகத்துக்கு விநாயகமூர்த்தி வரவழைத்தார். ஏன் தேதி 23 ஆகியும் இவர்களுக்கு உதவி வழங்காமல் இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார் அதற்கு சாறுமதியும் அவரது கணவர் முரளியும் இனி வருங்காலங்களில் அப்படி செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
உதவித்தொகை பெறுபவர்களான ராணி அம்மாள் பவுனு எல்லம்மாள் போன்ற பயனாளிகள் ஒவ்வொரு மாதமும் சாருமதி வருவதில்லை அவரது கணவர் முரளிதான் எங்களுக்கு வந்து பணம் கொடுக்கிறார் அதிலும் 20ஆம் தேதிக்கு பிறகு கொடுக்கிறார் அவர் தபால் ஆபீசில் ஊழியராக வேலை பார்க்கிறாராம் அவருக்கு எப்பொழுது நேரம் கிடைக்கிறது அப்பொழுது வந்து உதவி தொகைகளை வழங்குகிறார் என்றெல்லாம் (நேரிலேயே) விநாயகமூர்த்தி இடம் சாட்சியம் அளித்தனர். அது மட்டுமல்ல உதவித் தொகை வழங்க சாருமதி வராததால் அவருடைய கணவர் முரளி பெரும்பாலான இடங்களில் உதவித்தொகைகளை கையா ஆடல் செய்வதாகவும் இதற்கு சமூக திட்ட பாதுகாப்பு தாசித் தலைவர் விநாயகமூர்த்தி துணை போவதாகவும் இந்த கூட்டுக் கொல்லையில் சாருமதியின் கணவர் முரளிக்கும் சமூகத் திட்ட பாதுகாப்பு தாசில்தாரர் விநாயகமூர்த்திக்கும் சம பங்கு இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் பேரணாம்பட்டு தாலுக் காவில் தகுதி இல்லாத பயனாளிகளுக்கு எல்லாம் உதவி தொகை சென்று சேர்கிறது இதை நேரில் ஆய்வு செய்தால் தமிழக அரசுக்கு ஒவ்வொரு மாதமும் பல லட்ச ரூபாய் சேமிப்பாகும் என்றெல்லாம் கூட சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
விநாயகமூர்த்தி அவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு முதியோர் தொகை சம்பந்தமாக விளக்கம் கேட்டு வரும் பாதிக்கப்பட்ட பயனாளிகளை கோபமாகவும் பேசுவதாக பயனாளிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் சமூக நலத்திட்ட பாதுகாப்பு தாசில்தார் விநாயகமூர்த்தி நூற்றுக்கணக்கான தகுதி இல்லாத பயனாளிகளுக்கு உதவித்தொகை கிடைக்க துணை போகிறார் என்றும் பயனாளிகள் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து அவரிடம் வசை வாங்கி செல்லும் பயனாளிகள் வெளியே போ என்று சமூகத்திட்ட பாதுகாப்பு தாசில்தார் விநாயக மூர்த்தி கூறுவது எங்களுக்கு கவலை அளிக்கிறது. வெளியே போங்கள் என்று பயனாளிகளை விரட்ட தாசில்தாரர் விநாயகமூர்த்திக்கு என்ன உரிமை உள்ளது இது அரசு தாலுகா அலுவலகம் யார் வேண்டுமானாலும் வருவார்கள் வெளியே போ என்று சொல்ல தாசில்தார் விநாயகர் மூர்த்திக்கு என்ன உரிமை இருக்கிறது என்றெல்லாம் முனுமுனுத்தபடி செல்கின்றனர். எனவே இது குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அவர்கள், பயனாளிகளை ஆபாச வார்த்தைகளால் பேசும் சமூகத்திட்ட பாதுகாப்பு தாசில்தாரர் விநாயகமூர்த்தி மீது நடவடிக்கை எடுத்து பேர்ணாம்பட்டு தாலுகாவில் முதியோர் தொகை வழங்கும் விவகாரத்தில் உயரதிகாரிகள் தலையிட்டு ஆய்வுசெய்து,
தகுதியான பயனாளிகளுக்கு மட்டும் உதவித்தொகைகளை வழங்கி தகுதி இல்லாத பயனாளிகளின் உதவித்தொகைகளை ரத்து செய்ய வேண்டும் என்பது பேரணாம்பட்டு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.