சர்வே செக்ஷனில் முறைகேடுகளும்-குளறுபடிகளும்.. சர்வேயர் பழமலையின் வசூல் வேட்டை படுஜோர் ..?
காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம். சர்வே செக்ஷனில் முறைகேடுகளும்-குளறுபடிகளும்.. சர்வேயர் பழமலையின் வசூல் வேட்டை படுஜோர் ..?

வேலூர் மாவட்டம். காட்பாடி வட்டாட்சியர்  அலுவலகம் குடியாத்தம் செல்லும் வழியில் அமைந்திருக்கும் வட்டாட்சியர் அலுவலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக  செயல்பட்டு வருகிறது இதில் சர்வே நில அளவை செக்ஷனில் நாளுக்கு நாட்களுகும். பல ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட புகார் கூறும் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது உண்மை நிலவரத்தை விசாரித்த போது கிடைத்த தகவல் இங்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பழமலை என்பவர் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக சர்வேயராக பணியாற்றி வருகிறார் இவர் காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட வீட்டுமனைகள் நிலம் வீடுகள் என சர்வே செய்து நிலம் அளப்பதற்கு முறையாக அரசுக்கு பணம் கட்டியும் நிலம் வீட்டுமனை பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறாராம். திருவலம் சர்வேயர் பழமலை இவர் இடத்திற்கு ஏற்றார்போல் நிலம் சர்வே செய்ய ஒரு ரேட் நிர்ணயம் செய்து லஞ்சமாக கொடுப்பவர்களுக்கு மட்டும் நிலம் அளந்து சர்வே செய்ய வருவாராம். இல்லை என்றால் பல மாதங்கள் ஆனாலும் சரி ஆண்டுகளாக ஆனாலும் சரி தட்டிக் கழிப்பாராம். யாராவது காரணம் கேட்டால் மாவட்ட ஏடி அவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் தனது செக்ஷனில் வேலை செய்பவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது ஆகையால் நான் உடல்நலம் சரியில்லாமல் லீவு எடுத்துக் கொண்டிருக்கிறேன் மாதக்கணக்கில் என்று கூறிக் கொள்வாராம். மேலும் லஞ்சமாக தன் கேட்ட பணம் கொடுக்கவில்லை என்றால் யாரும் ஒத்துழைக்க மாட்டாராம். எனது மேலதிகாரிகள் மேலும் இவர் மேலதிகாரிகளுக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் வேலை செய்யமாட்டார்கள் கையெழுத்து போட மாட்டார்கள். நான் என்ன செய்யணும் என்கிறாராம். இதனால் நிலத்தை அளக்க பொதுமக்கள் அரசுக்கு பணம் கட்டியும் சர்வே செய்ய வராமல் இருக்கும் திருவலம் பிற்கா சர்வேயர் பழமலையை ஒரு சிலர் லஞ்ச ஒழிப்பு போலீசில் மாட்டிவிட திட்டமிட்டு இருப்பதாக வட்டாட்சியர் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்ததை நாம் காதால் கேட்க முடிந்தது மேலும் அவரை யாரும் ஒன்றும் செய்யமுடியாது லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தனியாக லஞ்சம் சர்வேயர் பழமலை மூலம் மாதம் மாதம் ஒரு தொகை போகிறது என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர் எனவே திடீரென காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சர்வே செக்ஷனில் திடீர் சோதனை நடத்த வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும், இது சம்பந்தமாக வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் குமரவேல் பாண்டியன் அவர்கள் திருவலம் பிற்கா சர்வேயர் பழமலை மீது விசாரணை மேற்கொண்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்போறா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்