இவர் வேலூர், சென்னை பேரூராட்சிகள் மண்டலத்திற்கு உட்பட்ட ஒடுகத்தூர், அம்மு, திருவலம், சேத்துப்பட்டு, போளூர், திமிரி, ஸ்ரீ பெரும்புதூர் போன்ற பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றியவர் தான் ர.ஆனந்தன் இவர் வேலூர் மாவட்டம் காட்பாடி பவானி நகர் பகுதியை சேர்ந்தவர் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சி பணியாற்றி வந்த இவர் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் பணியிடம் மாறுதலாகியாபிறகு திமுக அரசு ஆட்சி அமைத்த பிறகு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேரூராட்சிகள் நகராட்சியாக மாற்றப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு வெளியிட்டார் திருப்பூர் பேரூராட்சிகள் மண்டல பகுதிகளில் உட்பட்ட பணியிடம் மாறுதலாகி அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சியில் ஒரு பெரிய தொகை பார்த்துவிடலாம் என்று திருப்பூர் மாவட்டம் அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சிகையே தேர்வு செய்து துறை அமைச்சர் மற்றும் இயக்குனர் வரை பணத்தை வாரி இறைத்து பணியிடம் மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் திருப்பூர் மாவட்டம். அவிநாசி சிறப்பு பேரூராட்சியின் நிர்வாகத்தில் லஞ்ச ஊழலில் கொடிகட்டிப் பறந்ததை யாராலும் மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.
தற்போதும் தொடரும் செயல் அலுவலர் ர.ஆனந்தன் மூலமாக அவல நிலை!
அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சியில் லஞ்சம் வாங்கும் பட்டியல்.!
1. 500 சதுர அடி வீட்டிற்கு அனுமதி வழங்க 2500 ஆயிரம் லஞ்சம்.
2). 500 சதுர அடிக்கு மேல் ஆயிரம் சதுரடி வரை அனுமதி 25 ஆயிரம் லஞ்சம்.
3). 1000 சதுர அடிக்கு மேல் 2000 சதுர அடி வரை கட்டும் வீட்டிற்கு அனுமதி தர 50,000 ரூபாய் லஞ்சம்.
4). வணிகரீதியான கடைகளுக்கு
100 சதுரடி உள்ள ஒரு கடைக்கு அனுமதிக்கு வழங்க 10000 ரூபாய்
5) இரண்டு மாடி அல்லது மூன்று மாடி வரை வணிக வளாகம் கட்டும் கட்டிடத்திற்கு அனுமதி வழங்க ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை லஞ்சம்.
6) அதுபோல் சாலைகளில் நடைபாதை கடைகளுக்கு அனுமதி வழங்க ஒரு கடைக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் .
7). திருமண மண்டபங்கள் அனுமதி வழங்க 10 லட்சம் வரை லஞ்சம்.
8) குடிநீர் குழாய் இணைப்பு வீடுகளுக்கு வழங்க 20 ஆயிரம் ரூபாய் 10 வருடம் முன்பே லஞ்சம் வாங்கியதாக தகவல்!
இப்படி அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சியில் லஞ்ச பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது என்ற தகவலை சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மாதம் 10 லட்சம் ரூபாய் வரை பேரூராட்சிக்கு லஞ்சமாக வருவதாகவும் தகவல் வந்து கொண்டிருக்கிறது.
இப்படி பல கோடி வரை அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சியில் லஞ்சம் ஊழல் நடந்ததாக தகவல் வந்துள்ளது.
கடந்த ஒரு 5 மாதத்திற்கு முன்பு அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு செயல் அலுவலர் ர.ஆனந்தன் பணியிட மாறுதலில் வந்தவுடன் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அனைத்து ஃபைல் மற்றும் காசோலைகளை எடுத்து தனது கண்ட்ரோலில் பேரூராட்சியில் பல லட்சம் ரூபாய் வரை பல பெயர்களில் காசோலைகளை போட்டு பணத்தை எடுத்து ஊழல் செய்து வருகிறாராம் செயல் அலுவலர் ர.ஆனந்தன்
அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சியில் ஒரு சில பணியாளர்களை வைத்து இடைத்தரகர்களை ஆதிக்கம் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இடைத்தரகர்களை வைத்து மட்டுமே அனைத்து பணியும் நடைபெறுவதாகவும் நேரடியாக பொதுமக்களுக்கு பேரூராட்சி. அலுவலர்கள் எந்தப் பணியையும் செய்து தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
நியாயமான முறையில் வீடு மற்றும் வணிக ரீதியான கடைகளுக்கு அனுமதி கேட்டால் ஐந்து மாதங்கள் குறையாமல் மனுதாரர்களை அழைக்க விடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதுபோல் வணிக வளாகங்கள் கட்டி முடிந்த கடைகளுக்கு பல மாதங்களாக வரி போடாமல் இழுத்தடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திரைப்பட பாணியில் போல் கொடுக்க வேண்டியதைை கொடுத்துவிட்டால் அனைத்து வேலையும் சுலபமாக முடிந்துவிடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் மேலும் எந்த வேலைைைை ஆக வேண்டும் என்றாலும் லஞ்சம் பெற்றுக் கொண்ட பிறகு அனுமதி வழங்குவதாகவும் வரி போடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ர.ஆனந்தனிடம் எது கேட்டாலும் எனக்கு தெரியாது நான் புதிதாக வந்து உள்ளேன் நான் கேட்டு சொல்கிறேன் அலுவலகத்தில் உள்ளவர்கள் யார் பெயரும் எனக்கு தெரியாது யாருடைய தொலைபேசியும் எனக்கு தெரியாது வேண்டுமென்றால் நீங்கள் நேரடியாக பேரூராட்சி அலுவலகத்தில் வந்து கேட்டுக் கொள்ளுங்கள் என்ற பதில் மட்டுமே சொல்லிவிட்டு தொலைபேசியை துண்டித்து விடுகிறார்.
மேலும் அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சியில் கால்வாய்களில் தேங்கி நிற்கும் கழிவு நீர்கள் எங்கேயும் செல்லாமல் அப்படியே தேங்கி நிற்பதால் கொசு அதிகமாக உருவாகி டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. என்ற தகவலும் வெளியாகி உள்ளது
இதைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் நடவடிக்கை எடுக்காமல் அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் லஞ்சம் வாங்குவதிலேயே குறியாக உள்ளது என்ற குற்றச்சாட்டும் வந்துள்ளது.
எது எப்படியோ தற்போது
லஞ்ச ஊழலில் கொடிகட்டி பறக்கும் அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சியின் அவல நிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்மையான அதிகாரிகளை நியமித்து பேரூராட்சியில் தணிக்கை செய்து லஞ்ச ஊழல் பெருச்சாளிகளை களை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களும் பொதுமக்களின் கோரிக்கையாகும்.