திருப்புத்தூர் கடைவீதியில் பேரூராட்சி, சுகாதார துறையினர் திடீர் ஆய்வு..!
• Bharathaidhazh
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியகடைவீதி, சின்னக்கடை வீதி, அண்ணா சிலை, காந்தி சிலை, 4ரோடு மற்றும் முக்கிய பகுதிகளில் உணவகங்கள், மளிகை கடைகள், பழக்கடைகளில் தடை செய்யப்பட்ட பாலித்தின் பைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக வந்த தகவலை அடுத்து திருப்புத்தூர் பேரூராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர், ஆய்வின்போது கடைகளில் பயன்படுத்தப்பட்ட தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர், நிகழ்ச்சியில் சுகாதாரத்துறையில் வட்டார மேற்பார்வையாளர் சகாய ஜெரால்ட் ராஜ் திருப்புத்தூர் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர், மேஸ்திரி மோகன் மற்றும் சுகாதார பணியாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள் இந்நடவடிக்கையை மேற்கொண்டனர்.