தாலிக்கு தங்கம் திட்டத்தில் முறைகேடு தப்புவாரா ... விரிவாக்க அலுவலர் ராணி...?
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டங்களில் முறைகேடு கே.வி குப்பம் வட்டார வளர்ச்சி ஆபீஸில்.. தப்புவாரா விரிவாக்க அலுவலர் தில்லாலங்கடி ராணி ...?
           தில்லாலங்கடி ராணி 



தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டங்களில் முறைகேடு கே.வி குப்பம் வட்டார வளர்ச்சி ஆபீஸில்.. தப்புவாரா விரிவாக்க அலுவலர் தில்லாலங்கடி ராணி ...?

    

வேலூர் மாவட்டம். கே.வி குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது இதில் சமூக நலப் பாதுகாப்பு விரிவாக்க அலுவலராக பணிபுரிந்து வருபவர் கில்லாடி ராணி இவர் மீது நாள்தோறும் அடுக்கடுக்கான புகார் உள்ளதாக தகவல் கூறும் வட்டார வளர்ச்சி அலுவலக வட்டாரங்கள் ஆனால் இதுவரை இவர் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட சமூக நலப் பாதுகாப்பு அலுவலர் முருகேஸ்வரியும் முறைகேடுகளுக்கு துணையோ ...?

தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது இத்திட்டத்தின் பட்டம் படிப்பு, டிப்ளமோ முடித்த பெண்களின்  திருமணத்திற்கு 8 கிராம் தங்கத்துடன் 50 ஆயிரம் ரூபாய் பணமும் அதேபோல், பத்தாம் வகுப்பு முடித்த பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்கமும் 25 ஆயிரம் ரூபாய் பணமும் தமிழக அரசு சமூக நல பாதுகாப்பு துறை சார்பாக வழங்கப்பட்டு வருகிறது மேலும் இந்த நிலையில் கே.வி குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக பலமுறை செய்திகள் நமது பாரத இதழிலும் மற்ற செய்தித்தாள்களிலும் ஏற்கனவே பலமுறை செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் கே.வி குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் சமூக நலப் பாதுகாப்பு விரிவாக்க அலுவலர் கில்லாடி ராணி என்பவர் தில்லு முல்லுகளிலும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளாராம் என தகவல். மேலும் பயனாளிகளிடம் லஞ்சம் வாங்குவதாகவும் செய்திகள் வெளியிட்டு இருந்தோம் ஆனால் இதுவரையும் எந்த ஒரு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாது ஏன் என்பது தெரியவில்லை கே.வி குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விரிவாக்க அலுவலராகப் பணிபுரிந்து வரும் தில்லாலங்கடி ராணி என்பவர் தனது சொந்த ஊரான கே.வி. குப்பத்திலே சுமார் 7 ஆண்டுகளாக பென்சிகையை தேய்த்து தேய்த்த வண்ணம் உள்ளாராம். ஏழை மக்கள் தங்களது மகளின் திருமணத்திற்காக வட்டிக்கு  கடன். உடனை வாங்கி லஞ்சமாக ரூபாய் 5000 முதல் ரூபாய் 8000 வரை கொடுத்து தங்களுக்கு சலுகை கிடைத்தால் போதுமென இருந்து வரும் பயனாளிகள்  இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் கழித்து கே.வி குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சமூக நலப் பாதுகாப்பு விரிவாக்க அலுவலரிடம் சென்று கேட்டால் தரக்குறைவாக பேசுவதாகவும் சாதி பார்த்து திட்டித் தீர்ப்பதாகவும் அடுக்கடுக்கான புகார் எழுந்த வண்ணம் உள்ளது மேலும் சமூக பாதுகாப்புத் துறையில் வழங்கப்படும் தாலிக்கு தங்கம் திட்டத்தில் பயனாளிகளின் வீட்டிற்கே சென்று ரூபாய் 5,000 முதல் 8,000 வரை என வசூல் செய்வதாக புகார் வலுத்துள்ளது, கே.வி குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நலப் பாதுகாப்பு விரிவாக்க அலுவலராக இருக்கும் தில்லாலங்கடி ராணி தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளின் வீட்டிற்கு ஆட்டோவில் சென்று வெரிஃபிகேஷன் செய்வதாக சொல்லி ஒரு தொகையைக் கரந்து விடுவாராம். மேலும் தனது கணவர் தீயணைப்பு துறையில் பணி செய்து ஓய்வு பெற்ற அவரையும் தனது மகனையும் வைத்துக்கண்டு  திருமண நிதி உதவித் திட்டத்திற்கு பதிவு செய்தவரின் பயனாளி வீட்டிற்கு சென்று வெரிஃபிகேஷனில் ஈடுபடுவதாகவும் இது தவிர எப்போதும் கூட புரோக்கர் ஒருவரை வைத்துக் கொண்டு இருவரும் இரண்டு சக்கர வாகனத்தில் பயனாளிகளின் வீட்டிற்கு சென்று டிகிரி படித்தவர்களிடம் ரூபாய் 8000-மும், பத்தாம் வகுப்பு படித்தவர்களிடம் ரூபாய் 5000-மும் வசூல் செய்து வருகிறாராம் இந்த லஞ்ச வசூல் பேயின் பசியை அடக்கும் விதமாக நமது செய்திகளின் அடிப்படையில் வேலூர் மாவட்ட சமூக நலப் பாதுகாப்பு அலுவலர்  முருகேஸ்வரி. முறைகேடுகள்  செய்துவரும் கே.வி குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் விரிவாக்க அலுவலர் தில்லாலங்கடி ராணி மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை பார்த்தால் மாவட்ட சமூக நல பாதுகாப்பு அலுவலர் முருகேஸ்வரிகையே மீறிய அதிகாரம் படைத்தவராக உலாவரும் செயல் அலுவலராக வழிகாட்டி தில்லாலங்கடி ராணி. வேலூர் மாவட்ட சமூக நல பாதுகாப்பு அலுவலகத்தில் மட்டுமல்லாமல் பத்துக்கும் மேற்பட்ட சமூக நலப் பாதுகாப்பு விரிவாக்க அலுவலகங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு எனது உறவினர் ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் இருப்பதாக கூறிக்கொண்டு அனைவரையும் மிரட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது இது தவிர  மாவட்ட சமூக நலப் பாதுகாப்பு அலுவலர் முருகேஸ்வரிகையே வழிகாட்டி செயல் அலுவலராக வலம் வருகிறாராம், கே.வி குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருக்கும்  சமூக நல பாதுகாப்பு விரிவாக்க அலுவலர் கில்லாடி ராணி என்கிறார்கள் கே.வி குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள். கிடைத்த தகவலின் அடிப்படையில் வேலூர் மாவட்ட சமூக நலப் பாதுகாப்பு அலுவலரிடம் கேட்டபோது அப்படியெல்லாம் எதுவும் இல்லை என மறுக்கிறார் இனியும் மவுனம் காக்காமல் வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சமூக நல பாதுகாப்புத் துறையில் முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ள கே.வி குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விரிவாக்க அலுவலராகப் பணிபுரியும் கில்லாடி ராணி மீதும், மாவட்ட சமூக நல பாதுகாப்பு அலுவலர் முருகேஸ்வரி மீதும் தமிழக சமூக நல பாதுகாப்பு துறை இயக்குனரும், சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சரும் மவுனம் காக்காமல் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துப் பார்ப்போம் ...?