கள்ளக்குறிச்சியில் லஞ்சம் வாங்கிய நில அளவையர் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் விஜிலென்ஸ் போலீசாரால் அதிரடி கைது ..!

சின்னசேலம், வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய நில அளவையர் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் விஜிலென்ஸ் போலீசாரால் அதிரடி கைது ..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நைனார்பாளையம் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ஜெயராமன் இவர் தனது நிலத்தை அளப்பதற்காக  கிராம நிர்வாக உதவியாளரான சுசீலாவை அணுகியுள்ளார் அவரும் நில அளவையர் சூர்யாவும் நிலத்தை அளப்பதாக கூறி ஜெயராமனிடம் ரூபாய் 24.ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என இருவரும் கூறியுள்ளனர், லஞ்சம் பணம் கொடுக்க விரும்பாத ஜெயராமன் விழுப்புரம் மாவட்ட விஜிலென்ஸ் போலீசில் புகார் அளித்துள்ளார் அதன் பேரில் விஜிலென்ஸ் போலீசார் உதவி கண்காணிப்பாளர் தேவநாதன், காவல் ஆய்வாளர் திருவெங்கடம் ஆகியோர் தலைமையில் ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுக்களை ஜெயராமனிடம் கொடுத்து நிலம் அளவீடு  செய்துள்ள இடத்திற்கு சென்று ஜெயராமன் நில அளவையர் சூர்யா மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் சுசீலாவிடம் ரசாயனம் கலந்த ரூபாய் பணத்தை கொடுத்தபோது லஞ்சமாக வாங்கியபோது மறைந்திருந்து விஜிலென்ஸ் போலீசார் கையும் களவுமாக பிடித்தனர் பின்னால் இரு பெண் அரசு ஊழியர்களையும்  சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய பின்னார் வழக்குப்பதிவு செய்து கைது  செய்து அழைத்துச் சென்றனர் இச்சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத்தில் லஞ்சம் வாங்கிய புகாரில் நில அளவையர் சூர்யா, கிராம நிர்வாக உதவியாளர் என இரு பெண்களும் கைது செய்யப்பட்ட நிலையில் சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது