லட்சக்கணக்கில் கொள்ளை போகும் மக்களின் வரிப்பணம் ஊழலில் சிக்க போகும் கே.வி குப்பம் ஸ்கீம் பி.டி.ஓ கலைச்செல்வி, மனோகரன் .. டெட்டி பி.டி.ஓக்கள்.
லட்சக்கணக்கில் கொள்ளை போகும் மக்களின் வரிப்பணம் ஊழலில் சிக்க போகும் கே.வி குப்பம் ஸ்கீம் பி.டி.ஓ கலைச்செல்வி, மனோகரன். டெட்டி பி.டி.ஓக்கள்.?

வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஸ்கீம் பி.டி.ஓவாக பணியாற்றி வருபவர் குடியாத்தம் பகுதியைச் சார்ந்த கலைச் செல்வி இவர் மீது பி.டி.ஓ அலுவலக வட்டாரத்தில் பேசப்படுவது இவருக்கு கொடுக்கவேண்டிய கமிஷனை கொடுத்துவிட்டால் எந்தவித பணிகளையும் பார்க்காமல் கண்மூடிக் கொண்டு கையெழுத்து போட்டு பில் பாஸ் செய்து விடுவாராம் இதனால் இவரது அதிகாரத்திற்குட்பட்ட பணிகள் எல்லாம் தரமற்ற முறையில் நடந்து வருவதாக கூறப்படுகிறது தனக்கு கொடுக்க வேண்டிய கமிஷனை வரவில்லை என்றால் பில் பாஸ் செய்யாமல் சட்டம் நீதி நேர்மை என்று பேசுவாராம் ஸ்கீம் பி.டி.ஓ கலைச்செல்வி ஏதாவது சிக்கல் வந்து விட்டால் அரசியல்வாதிகள் மீது குறைகள் கூறுவாராம், ஊழலுக்கு துணை போகும் டெப்டி  பி.டி.ஓ  மனோகரன், என்றும் கூறப்படுகிறது, மேலும் கே.வி குப்பம் ஒன்றியத்திற்குட்பட்ட காங்குப்பம் ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில், பாரதப் பிரதம மந்திரி யோஜனா பசுமை வீடு திட்டத்தில், தனிநபர் கழிப்பறை திட்டத்தில், என காங்குப்பம் ஊராட்சி செயலர் ஆனந்தன் மூலம் செய்யாத வேலைகள் எல்லாம் செய்த மாதிரி போலி பில் போட்டு பாஸ் செய்து லட்சக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை வாரி குவிக்கும் கே.வி.குப்பம் ஸ்கீம் பி.டி.ஓ கலைச்செல்வி இவர் இதே அலுவலகத்தில் ரெகுலர் பி.டி.ஓவாக இருந்தபோதும் தனி ராஜ்ஜியம்‌ நடத்தி கொண்டு வந்துள்ளார் மேலும் இந்த அலுவலகத்தில் இவருக்குக் கீழ் பணிபுரியும் டெப்டி பி.டி.ஓக்களும் உடந்தையாக செயல்பட்டு வருகிறார்களாம் என தகவல், கே.வி குப்பம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் செயலர்களை தனது அதிகாரத்தை பயன்படுத்தி கொண்டு அவர்களையே ஊழலில் ஈடுபடுத்தி வருவதாக பி.டி.ஓ வட்டாரத்தில் பேசிக்கொண்டிருந்தை நம் காதால் கேட்க முடிந்தது இவர்களை எந்த மேல் அதிகாரியும் கண்டும் காணாமல், கண்டிக்க முடியாமல் அப்படியே அவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்க முடியாமலும் அவர்கள் உடனே ஊழல் வாழ்க்கை வாழ பழகிக் கொண்டு பல அதிகாரிகள் மாறி மாறி சென்றுவிட்டனர் கடந்த அதிமுக ஆட்சியில் தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறையில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்ட நிலையில் மாஜி மந்திரி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஊழலில் சிக்கினார்கள் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று உள்ளதால் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த உடன் மீண்டும் ஊராட்சி மன்ற தலைவர்களைக் கொண்டு, செயலர் மூலம் ஒரு கமிஷன் பார்ப்போம் கே.வி குப்பம் பி.டி.ஓ கலைச்செல்வி மற்றும் டெப்டி பி.டி.ஓக்களை பல தில்லுமுல்லுகள் வேலைகளை செய்து வரும் இவர்கள் மீது சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர், இதனால் தனது பெயரை சொல்லாத சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகள் கணிசமாக நிறைவேற்றி வரும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் குற்றச்சாட்டுகளை தடுக்கும் வகையில் இரும்பு கரங்களை கொண்டு அதிகாரிகளை அடக்க வேண்டும் ஊழல் வழக்குகளில்  ஆயிரக்கணக்கானோர் அதிகாரிகள் சிக்கியுள்ள நிலையில் அவர்கள் மீது உள்ள வழக்குகளை விரைவில் விசாரணை செய்து சிறைக்கு அனுப்பும் பணி நீக்கம் செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வந்தார் ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தை வாரி குவிக்கும் பேய்களின் மத்தியில் பயம் ஏற்படும் என்று கூறுகிறார், ஆகையால் கே.வி குப்பம் பி.டி.ஓ அலுவலகத்தை நோட்டமிட்டு திடீர் என கே வி குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தால் லட்சக்கணக்கில் பணம் சிக்கக் கூடும் என்கின்றனர் பி.டி.ஓ அலுவலக ஊழியர்கள் லஞ்ச ஒழிப்புத் துறை தனது கடமையை செய்ய போவதா என்பதை பொறுத்திருந்துதான் பார்ப்போம்