வேலூர் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகங்களில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் சிக்கி கொண்ட காசு பணம் துட்டு மணி மணி வசூல் வேட்டையர்கள் இணைய பதிவாளர்கள் வனிதா, நித்தியானந்தம்..?
வேலூர் மாவட்ட பத்திரப்பதிவு  அலுவலகங்களில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் சிக்கி கொண்ட காசு பணம் துட்டு மணி மணி வசூல் வேட்டையர்கள் இணைய பதிவாளர்கள் வனிதா, நித்தியானந்தம்..?

நிலை 1) இணைப்பதிவாளர் வனிதா,
நிலை 2) இணைப்பதிவாளர் நித்தியானந்தம் 

வேலூர் மாவட்டம் பத்திரப்பதிவு அலுவலகம் வேலபாடியில் செயல்பட்டு வருகிறது இங்கு இணைப் பதிவாளர்கள் நிலை 1, நிலை 2 என இணை பத்திரப் பதிவாளர்கள் பணிசய்து  வருகின்றனர் இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சொத்துக்கள் பதிவு, திருமண பதிவு, சொத்து வில்லங்கம், என சொத்து விற்பதற்கும், வாங்குவதற்கும் பத்திரப்பதிவு செய்திட நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர் இதனை பயன்படுத்திக் கொண்டு வெளி புரோக்கர்கள் மூலம் பொதுமக்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு நிலை (1) இணைப் பதிவாளர் வனிதா, நிலை (2) இணைப் பதிவாளர் நித்தியானந்தம், மற்றும் மேல் அதிகாரிகள் மூலம் பத்திரப் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர் இதற்கு மேல் அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருகின்றனர் இதனை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அனைத்து பதிவுகளும் ஆன்லைன் மூலமாகவும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாகவும் செய்யப்பட்டு வருகிறது இந்த நிலையில் வேலூர் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலை 1யில் இணைப் பதிவாளராக இருப்பவர் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த வனிதா, மற்றும் நிலை 2யில் இணை பதிவாளர் (பொறுப்பில்) இருப்பவர் திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் கிராமத்தை சேர்ந்த நித்தியானந்தம், இவர்களுடைய பணிகள் செய்வதற்கு அலுவலகத்தில் சொத்து பதிவுகள் மேற்கொள்ளும் ஆவணங்கள் பெறவும் இரண்டு இணை பதிவாளர்களும் வெளி புரோக்கர்கள் உடன் இணைந்து லஞ்சம் பெற்று வருவதாக வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் சென்ற வண்ணம் இருந்த நிலையில் அதன் பேரில் சமீபத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு துறைகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை செய்தனர் அந்த சமயம் வேலூர் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப் பதிவாளர்கள் அறையில் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர்கள் விஜய், விஜயலட்சுமி ஆகிய தலைமையிலான போலீசார் திடீரென அதிரடியாக பத்திரப்பதிவு அலுவலகத்துக்குள் நுழைந்தனர் உடனடியாக அலுவலக கதவை அடைத்தனர் உள்ளே புரோக்கர்கள் மற்றும் பொதுமக்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை பின்னர் ஒவ்வொரு அறையாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர் அப்போது அலுவலகங்களில் உள்ள கழிவறை, மேஜைகள் வெளி புரோக்கர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சட்டை பாக்கெட்டுகளில் மறைத்து வைத்திருந்த கணக்கில் வராத லஞ்சப் பணம் ரூபாய் 1,94 லட்சத்தை பறிமுதல் செய்தனர் இதனை தொடர்ந்து அந்தப் பணம் தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர் இந்த சம்பவம் வேலூர் பத்திரப்பதிவு அலுவலக வட்டாரங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறும்போது தமிழக அரசு பத்திரப் பதிவுத் துறையில் பதிவு முறைகளை மற்றும் பணம் செலுத்தும் முறைகளை என அனைத்து டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகிறது இருப்பினும் பத்திரப் பதிவாளர்கள் உடனுக்குடன் பத்திரப் பதிவுகளை முறைகளை மேற்கொள்ளாமல் ஆவணங்கள் முறையாக இல்லை எனக்கூறி பத்திர பதிய வரும் மக்களை அலைக்கழித்து வருகின்றனர் மற்றொரு நாள் வந்தாலும் வேறு ஆவணங்கள் சரியில்லை என திருப்பி அனுப்பிவிடுகின்றனர் வெளி புரோக்கர்களிடம் லஞ்சம் பணம் கொடுத்தால் போதும் உடனடியாக பத்திரப் பதிவுகள் செய்து விடுகின்றனர் அவர்களும் சொத்து மதிப்பிற்கும் ஏற்றார்போல் பெனிசிலின் கணக்கிட்டு சொல்வதை பத்திரப்பதிவு செய்ய வருபவர்கள் கொடுக்க வேண்டும் இது குறித்து புகார்கள் பேரில் திடீர் சோதனை செய்தபோது ரூபாய் 1,94 கணக்கில் வராத லஞ்சப் பணம் பறிமுதல் செய்து விசாரணை நடத்தப்பட்டது இவ்வாறு கூறினார், 

வேலூர் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சத்தில் புரளியை வசூல் பேய்கள் இணைப் பதிவாளர்கள் நிலை 1) வனிதா,  நிலை 2) நித்தியானந்தம், இருவரையும் சரிக்கட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்..?

வேலூர் மாவட்ட பத்திர பதிவு அலுவலகத்தில் நிலை 1யில்)  இணைப் பதிவாளராக இருப்பவர் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் வனிதா இவர் சென்னை, ஓசூர், வேலூர், மாவட்ட பதிவு அலுவலகத்தில் தணிக்கைத் துறையில் பணியாற்றி உள்ளார் அப்போது இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன, மேலும் நிலை 2யில்) இணைப் பதிவாளர் (பொறுப்பில்) இருப்பவர் திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் கிராமத்தை சேர்ந்த நித்தியானந்தம் இவர் வேலூர் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் சூப்பிரண்டாக  பணியாற்றியபோது இவர் மீது ஏராளமான லஞ்ச குற்றச்சாட்டுகள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சென்ற வண்ணம், இவர்கள் இருவரும் வேலூர் மாவட்ட பதிவு அலுவலகத்தில் பணி புரிவதால் இவர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் நெருக்கமான தொடர்பில் இருந்ததால் தங்களை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என திமிராக பேசுவார்கள் இவர்கள் பெயரிலும் மற்றும் இவர்களின் உறவினர்கள் பெயரிலும் அசையும், அசையா சொத்துக்களை வாங்கி குவித்து இருக்கிறார்களாம் சொத்து விவரங்களை இவர்களது குடும்பத்தார் பெயரில் உள்ள சொத்து விவரங்களையும் விசாரணை நடத்தினால் பல்வேறு தகவல்கள் வெளிவரக்கூடும் என்கின்றனர் சார்பதிவாளர் வட்டாரங்கள் சமீபத்தில் பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் மாஜி மந்திரிகள் மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு பதியப்பட்டு நீதிமன்றத்தில் உள்ளது போல் இந்த இருவருடைய சொத்து குவிப்பு துரித விசாரணை விசாரித்தால் இவர்கள் மீதும் சொத்துக் குவிப்பு வழக்கில் இவர்களும் கைது செய்யப்படலாம் என்கிறது வேலூர் மாவட்டத்தில் உள்ள சார்பதிவாளர் வட்டாரங்கள் மேலும் நிலை 1) இணைப் பத்திரப் பதிவாளர் வசூல் ராணி வனிதா இவருக்கு தங்க நகைகள் கொள்ளை பிரியம் என சொல்லப்படுகிறது விதவிதமான தங்க ஆபரணங்களையும் வாங்கி வைத்துள்ளாராம், இவருக்கு நிகராக இருப்பவர்தான் நிலை 2) இணைப் பத்திரப்பதிவு பதிவாளர் (பொறுப்பில்) நித்தியானந்தம் பத்திர பதிய வருபவர்களை தாங்கள் எங்களை ஐயா என்று அழைக்க வேண்டும் அப்படி அழைக்க தவறினால் பத்திரம் செய்வதற்கு பத்துமுறை அலைக்கழிக்கபடும் என்று கூறுகிறாராம் இல்லை என்றால் உங்கள் வேலை ஆகாது என்கிறாராம் இவரும் தனது பெயரில் சொத்துக்கள் வாங்கி கொடுத்துள்ளதாகவும் இவருக்கு பணிவிடை செய்வதற்கு என நான்கு நபர்களை வெளிப்புறம் வைத்திருக்கிறாராம், இவர்கள் இருவரும் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கி பிறகும் அது ஒன்றும் இல்லை லஞ்ச ஒழிப்பு போலீசாரை எப்படி சரிகட்ட வேண்டுமோ அப்படி சரி கட்டி விடுவோம்  என தம்பட்டை போடுகின்றனர், இவர்கள் மீது பத்திரப்பதிவு துறை இயக்குனர் சிவன் அருள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் வேலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலை 1யில், நிலை 2யில், இணைப் பதிவாளர்  இருக்கும் இவர்கள் இருவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனை என்னவாக இருக்கும் நடவடிக்கைகள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்