பெயரளவில் செயல்படும் லஞ்ச ஒழிப்புத்துறை..?
பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலக சர்வே செக்ஷனில் அச்சமின்றி லஞ்சம் வாங்குவதா சிக்குவார்களா எட் சர்வேயர் ஹரிகிருஷ்ணன், நில அளவை வட்ட சார் ஆய்வாளர் கங்காதரன்.. ?
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் நில அளவை சர்வே செக்ஷனில் நாளுக்கு நாள் லஞ்ச புகார் கூறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது உண்மை நிலவரத்தை நமது நிருபர் குழு விசாரித்த போது கிடைத்த தகவல் இங்கு எட் சர்வராக இருப்பவர் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் இவர் பல ஆண்டுகளாக ஒரே இடத்திலேயே பணியாற்றி வருவதாகவும், மேலும் எட் சர்வேயர் ஹரிகிருஷ்ணன் என்பவர் சரி வாரியாக அலுவலகத்துக்கு வருவதில்லையாம் அலுவலக ஊழியரிடம் கேட்டாள் அவர் பேர்ணாம்பட்டில் இருப்பார் அலுவலகத்துக்கு வருவதில்லை என கூறுகிறார்கள் விண்ணப்பதாரர்கள் எட் சர்வேருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாலோ நேரில் சென்றாலோ சரியான ரெஸ்பான்சிபிலிட்டி கொடுப்பது இல்லையாம் என குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள் மேலும் இவருக்குக் கீழ் பணிபுரியும் வேலூர் சாத்துமதுரை பகுதியை சேர்ந்த நில அளவை வட்ட சார் ஆய்வாளர் கங்காதரன் என்பவர் பணிபுரிந்து வருகின்றனர் பேரணாம்பட்டு தாலுகாவிற்கு உட்பட்ட வீட்டுமனைகள் நிலம் வீடுகள் அளக்கும் முறையாக அரசுக்கு பணம் கட்டியம் நில ஆளாகாமல் காலம் தாழ்த்தி வருகிறாராம் இருவரும் கூட்டணியில் நில அளக்க இடத்திற்கு ஏற்றார் போல் நிலம் வீட்டுமனை அளப்பதற்கு ஒரு ரேட் நிர்ணயம் செய்து லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டும் சர்வே செய்து வருகிறார்களாம் இல்லையென்றால் விண்ணப்பத்தை ஓரம்கட்டிவிட்டு தட்டிக் கழிப்பார்களம் காரணம் கேட்டால் தாசில்தார், மாவட்ட நில அளவை உதவி இயக்குனர் சேகர் அதிகாரிக்கு மற்றும் செக்ஷனில் வேலை செய்பவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் யாரும் ஒத்துழைக்க மாட்டார்கள் நாங்கள் என்ன செய்வது என்கிறாராம் இதனால் அரசுக்கு பணம் கட்டிய சர்வே செய்ய வராமல் இருக்கும் எட் சர்வேர் ஹரிகிருஷ்ணன், வட்ட சார் ஆய்வாளர் கங்காதாரணை ஒரு சில விண்ணப்பதாரர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் மாட்டிவிட திட்டமிட்டு இருப்பதாக தாலுக்கா அலுவலக வட்டார ஊழியர்கள் பேசிக் கொண்டிருப்பதை நாம் காதால் கேட்க முடிந்தது மேலும் எட் சர்வே ஹரிகிருஷ்ணன் உடன் பணிபுரியும் சர்வேயர்களை லஞ்சப் பணம் வாங்காமல் எந்த பணியும் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டு இருப்பதாக தாலுகா அலுவலக ஊழியர் வட்டாரம் சொல்கின்றனர் பேர்ணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் நில அளவைத்துறை செக்சனில் லஞ்சம் வாங்காமல் எந்த பணியும் செய்ய மாட்டார்கள் என்பது நாடறிந்த உண்மையாக வெட்டவெளிச்சமாக தெரிகிறது லஞ்ச ஒழிப்பு துறை சர்வே செக்ஷனில் திடீர் சோதனை நடத்த வேண்டும் என்பது அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கையாகும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுக்குமா..? லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதைப் பார்த்தால் பெயரளவிற்கு செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் ஏற்கனவே இந்த நில அளவைத்துறை செக்ஸின் அலுவலகத்தை பற்றி பல செய்தித் தாள்களில் செய்தி வெளியானதும் நமது இதழ்களிலும் செய்தி வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது