வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை ஏ.பி.ஆர்.ஓ பரத்குமார் ஊடக ஸ்டிக்கர் வழங்குவதில் பத்திரிக்கையாளர்களிடம் பாகுபாடு காட்டி வரும் அவலநிலை .‌.?
வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை ஏ.பி.ஆர்.ஓ பரத்குமார் ஊடக ஸ்டிக்கர் வழங்குவதில் பத்திரிக்கையாளர்களிடம் பாகுபாடு காட்டி வரும் அவலநிலை .‌.? 

தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறை வாயிலாக பத்திரிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது சமீப காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போது உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பத்திரிக்கையாளர்களை முன் களப்பணியாளர்கள் என அறிவித்தார் அப்படி இருக்கும் சூழ்நிலையில் செய்தி மக்கள் தொடர்பு துறை வாயிலாக பத்திரிகையாளர்களுக்கு வழங்கக்கூடிய நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகன ஊடக  ஸ்டிக்கர் பத்திரிக்கையாளர்களின் விற்பனை எண்ணிக்கையை அறிந்து தொடர்ந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு வார இதழ் மாத இதழ் மாதமிருமுறை இதழ்கள் என  ஓராண்டு தொடர்ந்து வெளிவந்துக் கொண்டிருக்கும்  பத்திரிகையாளர்களுக்கு ஊடக ஸ்டிக்கர் வழங்க வேண்டும் அப்படி வழங்கப்படாமல் ஒரு சிலருக்கு விலை போகும் ஏ.பி.ஆர்.ஓ பரத்குமார் பெரிய பத்திரிக்கை, சிறுபத்திரிக்கை என பாகுபாடு காட்டுவதாக தகவல் மேலும் பத்திரிக்கையாளர்கள் ஊடக ஸ்டிக்கர் நடப்பாண்டில் ஜனவரி முதல் இன்று வரை நேரடியாகவும் தொலைபேசி மூலமாகவும் ஏ.பி.ஆர்.ஓ பரத்குமாரிடம் தொடர்பு கொண்டு கேட்டால் கடவுள் விநாயகப்பெருமான் இன்று போய் நாளை வா என்று சனி பகவானை கூறுவார் அதுபோன்று ஏ.பி.ஆர்.ஓ பரத்குமார் பத்திரிகையாளர்களிடம் பாகுபாடு காமித்து கூறிவரும் நிலை ஏற்பட்டுள்ளது தமிழக அரசு விதியின்படி ஓராண்டு தொடர்ந்து வெளி வரும் பருவ இதழ்களுக்கு ஊடக ஸ்டிக்கர் வழங்கலாம் என்ற விதி உள்ளது அப்படியிருக்க வேலூர் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் ஏ.பி.ஆர்.ஓ வாக பணியாற்றி வருபவர் பரத் குமார் பத்திரிக்கையாளர்கள் என்ற எண்ணத்தை கருத்தில் கொண்டு தொடர்ந்து வரும் பத்திரிகைகளை அங்கீகரித்து அரசின் விதிமுறைகளின்படி வேலூர் செய்தி மக்கள் தொடர்புத் துறையால் பத்திரிகையாளர்களுக்கு ஊடக ஸ்டிக்கர் வழங்கவேண்டும் அதுமட்டுமின்றி இவர் ஓர் ஆண்டுகாலம் பணியாற்றியபோது பத்திரிகையாளர்கள் துறை சார்ந்த தகவல்கள் கேட்டால் எது  வேண்டுமென்றாலும் பி.ஆர்.ஓ விடம்  கேளுங்கள் நான் ஒன்றும் உயரதிகாரி அல்ல ஆகையால் எது கேட்க வேண்டும் என்றாலும் நீங்கள் பி.ஆர்.ஓ விடம் கேளுங்கள் என்று கூறி விடுவாராம். இந்த நிலையில் இரண்டு மாதங்களாக பி.ஆர்.ஓ பணி காலியாக இருந்த நிலையில் ஏ.பி.ஆர் ஓ பரத்குமார் அவர்கள் வேலூர் செய்தி மக்கள் தொடர்பு துறை மாவட்ட அலுவலராக பொறுப்பில் இருந்தபோது ஒரு சில நாளிதழ்கள், வார இதழ், மாத இருமுறை, மாத இதழ்கள், பணியாற்றும் நிருபர்களிடம் கடுமையாக பேசுவதும் பாகுபாடு பார்ப்பதும் உண்டாம் பி.ஆர்.ஓ பொறுப்பில் இருந்த பரத் குமார் மீண்டும் ஏ.பி.ஆர்.ஓ வாக பணி மாற்றப்பட்டுள்ளார் இவர் பத்திரிகையாளர்களிடம் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் பத்திரிக்கையாளர்களின் உரிமைகளை பறிக்காமல்  விமர்சனத்துக்கு ஆளாகாமல் பத்திரிகையாளர்களின் உரிமைகளை பெற்று தந்திட உதவியாக இருந்திட வேண்டும் இது நமது வேண்டுகோள் மட்டுமல்ல வேலூர் மாவட்டத்திலுள்ள பத்திரிக்கையாளர்களின் வேண்டுகோளாகும்