வேலூர் பாலாறு செல்லியம்மன் கோவில் அருகில் காவல் உதவி ஆய்வாளர் விநாயகம் தலைமையில் ரூபாய் 200 கட்டாய வசூல் முக கவசம் அணிந்தால் கூட கட்டாய வசூல் வேட்டை ..?
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாலாறு செல்லியம்மன் கோயில் அருகில் பேரிகார்டு அமைத்து இரண்டு உதவி ஆய்வாளர்கள், விநாயகம், இரண்டு பெண் காவலர்கள் தலைமையில் மாஸ்க் அணிந்து வருபவர்களையும் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ 200 அபராதம் பிடுங்கிக் கொண்டு தான் இருசக்கர வாகனத்தை விடுகிறார்கள் அதுவே நான்கு சக்கர வாகனங்கள் எதுவாக இருந்தாலும் ரூபாய் 100 வாங்கிக்கொண்டு விட்டுவிடுகிறார்கள் அதிலும் அப்பாவி கூலி வேலை செய்பவர்களையும் இளைஞர்களையும் மடக்கிப்பிடித்து மாஸ்க் அணிந்து இருந்தால் கூட ரூபாய் 200 கப்பம் கட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளதாக இளைஞர்கள் புலம்பித் தள்ளுகின்றனர், காவல் துறையினர் யாராவது மாஸ்க் அணியாமல் சென்றால் கூட அவர்களை விட்டு விடுவது போன்ற சூழல் தற்போது ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது உள்ள அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்ற காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது, தமிழகத்தில் ஊடரங்கு உத்தரவு இரண்டு வாரங்களுக்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது இத்தகைய காரணத்தை பயன்படுத்திக் கொண்டு கொரோனா காலங்களில் அன்றாடும் கூலி வேலை செய்துவரும் தொழிலாளிகளை மாஸ்க் அணியவில்லை என்று பணம் ரூபாய் 200க்கு பில் போட்டு பணத்தை கட்டும்படி வற்புறுத்துகின்றனர் அப்படி இல்லை என்றால் உன் மீது ஏதாவது வழக்கை பதிவு செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார்கள் அப்பாவி ஏழைகளோ வழக்குக்கு பயந்து 200 ரூபாய் கப்பம் கட்டி வருகின்றனர் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு அவர்கள் அப்பாவி பொது மக்களின் வேதனையை அறிந்து காவல்துறையினர் கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாகும், இதனை மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் அவர்கள் அப்பாவி ஏழை மக்களிடம் கட்டாய வசூல் செய்துவரும் காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்