வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சி 1வது மண்டல பகுதிக்கு உட்பட்ட உணவகங்கள் சுகாதார சீர்கேட்டில் உள்ளன லஞ்சத்தை வாரி குவிக்கும் உணவு பாதுகாப்பு அதிகாரி கந்தவேல் இந்த நிலை நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் உணவு பிரியர்கள் குற்றம்சட்டுகின்றனர் வேலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் இரண்டாவது பிளாக்கில் உள்ளது தான் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது இதில் ஒரு பகுதியான மாநகராட்சி 1வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்நத கந்தவேல் என்பவர் இவர் தனது கடமைகளை சரிவர செய்யாமல் கையூட்டு பெறுவதிலேயே குறியாக இருப்பதாக சொல்லப்படுகிறது இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் போது ஓட்டல்கள், பாஸ்ட் புட் கடைகள், பிரியாணி கடைகள், ரோட்டோர விற்கப்படும் ஸ்வீட் பேக்கரி கடைகள், என உணவுப் பொருட்கள் விற்கும் கடைகளில் ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தவேல் சான்றிதழ்கள் வழங்க வேண்டும் மேலும் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் விற்பனை செய்பவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் இவர் தனது கடமைகளை சரிவர செய்யாமல் கையூட்டு லஞ்சம் பெற்று வருவதாக பகிரங்கமாக புகார் கூறப்படுகிறது பழக்கடைகளில் இராவைடு கல்லை வைத்து பழுக்க வைப்பது நடந்துவருகிறது அதேபோல் பல நாட்களான ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, கோழி இறைச்சி, மீன்கள் என அனைத்தையும் குளிர்பான பெட்டிகளில் வைத்து சுகாதாரமற்ற முறையில் தாராளமாக விற்பனை செய்து வருகின்றனர் பல நாட்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் விற்கப்படுகிறது கலப்பட எண்ணெய் பயன்பாடு அதிகம் உள்ளது ஹோட்டல்களில் உணவு தயாரிக்கும் மாஸ்டர்கள் அசுத்தமான முறையில் உள்ளதால் அவர்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடும் பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் இதர நோய்களுக்கும் ஆளாகிறார்கள் பல ஓட்டல்களில் ஊசிப்போன குழம்பு, சட்டினி தான் பொதுமக்கள் உணவு சாப்பிடும்போது ஊற்றிக் கொள்கின்றனர், இந்த நிலை தொடர்ச்சியாக இருக்கிறது இதனால் ஹோட்டல் காரர்களுக்கு, பொதுமக்களுக்கும் அடிக்கடி ஹோட்டல்களில் தகராறு ஏற்படுகிறது இதுவரை வாடிக்கையாக ஒன்றாக மாறிவிட்டது இதற்கு காரணம் வேலூர் மாநகராட்சி 1வது மண்டல பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தவேல் லஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் இருப்பதால் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள் மாநகராட்சி 1வது மண்டல பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஒருவர் இருக்கிறாரா என்பதே பொது மக்களுக்கு தெரியாது ஆனால் இவரே பொதுமக்களிடம் இருந்து புகார் வந்ததாக கூறி உணவு பொருட்கள் விற்பவர்கள், ஓட்டல்கள், ஸ்வீட் கடைகள், மெடிக்கல் ஷாப் களில், மீது மிரட்டி அவ்வபோது லஞ்சம் பெற்று கொண்டு வருகிறாராம் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை மிக ஜோராக நடைபெற்று தான் உள்ளது இவர்களும் இது சம்பந்தமாக யாரும் எதுவும் கூறுவதில்லை வேலூர் மாநகராட்சி 1வது மண்டலப் பகுதிகளில் சுகாதாரமற்ற உணவு பொருட்கள் விற்பனை படு ஜோராகவே விற்பனை ஆகிக் கொண்டுதான் இருக்கிறது இதற்கு உதாரணமாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கூறும் அறிவுரையை இதற்கு சாட்சி எந்த ஓட்டல்களிலும் உணவு பொருட்கள் சுகாதாரமான முறையில் இல்லை எனவே ஓட்டல்களில் உணவு சாப்பிட வேண்டாம், மெடிக்கலில் காலாவதியான மருந்து மாத்திரை பார்த்து வாங்குங்கள், உணவு பொருட்கள் கடைகளில் காலாவதி ஆகி விட்டதா என்பதை பார்த்து வாங்குங்கள், பழக்கடைகளில் பழங்கள் பார்த்து வாங்கி சாப்பிடுங்கள் அறிவுறுத்துகின்றனர் இந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தங்கள் மாமூல் வாங்கும் இடங்களில் சத்தமின்றி வசூலித்து வருவதாக சொல்லப்படுகிறது எனவே பொதுமக்கள் உடல்நலம் கருதி திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தால் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கந்தவேல் லஞ்ச வாங்கி குவித்திருக்கும் அதிகாரி சிக்கிக் கொள்வார் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் குமரவேல் பாண்டியன் அவர்கள் நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
வேலூர் மாநகராட்சி 1வது மண்டல பகுதிகளில் சுகாதார சீர்கேட்டில் உணவகங்கள் கரன்சி மழையில் உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தவேல்.?
வேலூர் மாநகராட்சி 1வது மண்டல பகுதிகளில் சுகாதார சீர்கேட்டில் உணவகங்கள் கரன்சி மலையில் உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தவேல்..?