வேலூர் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் குமுறல் சத்தம் முதலமைச்சருக்கு கேட்குமா..?
வேலூர் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் குமுறல் சத்தம் முதலமைச்சருக்கு கேட்குமா..? 


வேலூர் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தர பணி நியமன ஆணை வழங்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு  தூய்மைப் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் தமிழகத்தில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலக முழுவதும் கொரோனா பெருந் தொற்றில் வைரஸ் நோய் கோரத் தாண்டவத்தில் ஆடிக்கொண்டு  படைத்துக் கொண்டு இருக்கும் நிலையில் மாநகராட்சிகள் அலுவலகம், நகராட்சிகள் அலுவலகம், பேரூராட்சிகள் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் உட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேடுகளை மட்டுமல்ல, கொரோனா தொற்று உள்ள பகுதியில் பிளீச்சிங் பவுடர்,
சானீடைசர் தெளிப்பது, வீடு வீடாக சென்று குப்பை அள்ளுவது, ரோட்டோரங்களில் குப்பை அள்ளுவது, என்று தொடர்ந்து மக்களுக்காக களப்பணியாற்றி வருகிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். இது தவிர
மருத்துவமனைகளில் மருந்து கழிவுகளை அப்புறப்படுத்தவது முதற்கொண்டு சிறப்பாக அரும்பணியாற்றி வருகிற ஒப்பந்த அடிப்படையில் உள்ள தூய்மை பணியாளர்கள் அவர்களுக்க நிரந்தர பணி நியமன ஆணை வழங்க வேண்டும். என்று தமிழக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கும் முன்கள பணியாளர்களாக கருதப்படும் நாட்டின் சுத்தம் தூய்மை என்று விளங்கக்கூடிய தூய்மைப் பணியாளர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி நாள்தோறும் உயிரை பணயம் வைத்து வாழ்ந்து வரும் சூழ்நிலை இருக்கிறது அவர்களுக்கு இன்சூரன்ஸ் மற்றும் கொரோனா தொகுப்பு நிவாரணம் எதுவும் இல்லாமல் உள்ள நிலையில் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வை தூய்மைப்படுத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் மேலும் தூய்மைப் பணியாளர்கள்
8 மணி நேரம் மட்டுமே தூய்மைப் பணியாளர்களுக்கு பணி வழங்க வேண்டும். நீண்ட நேரம் பணி சுமை உள்ள காரணமும் உண்டு மேலும் Esi, Pf தூய்மைப் பணியாளர்களுக்கு கட்டாயம் வழங்க வேண்டும்.  
தன் வாழ்நாள் முழுவதும் குப்பைகளிலும், அலுக்குகளில் மக்களுக்காக வேலை செய்து, அந்த குப்பை நாற்றத்துடன் உணவை சாப்பிட்டுக் வாழ்ந்து கொண்டு நாட்டையே சுத்தமாக வைத்து மக்களை நோய் தொற்றில் பாதுகாக்கின்ற மாமனிதர்களை அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேன்மை படுத்த வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள், மேலும் தூய்மைப் பணியாளர்களின்  மேற்பார்வையாளர்களுக்கும் வார்டு அரை ஏற்படுத்தி தர வேண்டும் குளிக்க உடை மாற்றிக்கொள்ள தனி அறை பெண்களுக்காக ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாள்தோறும் ஐந்து வேளை பயோமெட்ரிக் கையைக் ரேகை பதிவு இடுவதால் மற்றும் கையெழுத்து போடுவதால் அவர்களுக்கு மாநகராட்சி மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளில் பெண்கள் ஆண்களுக்கு என்ன தனித்தனி அரை ஏற்படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்