தக்கோலம் முதல் நிலை பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உதவி
தக்கோலம் முதல் நிலை பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உதவி 
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் முதல்நிலை பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் அரிசி உட்பட அனைத்து பொருட்கள் அரக்கோணம் வட்டாட்சியர் பழனிராஜன் வழங்கினார், தக்கோலம் முதல் நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ச,கணேசன் முன்னிலையில் வழங்கப்பட்டது உடன் கிளர்க் ராமகிருஷ்ணன், சூப்பர்வைசர்கள் தூய்மைப் பணியாளர்கள் உடனிருந்தனர், உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இரண்டாவது அலை கடலின் அலைபோல் நாள்தோறும் வீசிக் கொண்டிருக்கும் நிலையில் தூய்மைப் பணியாளர்கள் தங்களது நேரங்கள் பாராமல் மக்களுக்காக தூய்மைப் பணி செய்து வரும் நிலையில் அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான வீட்டு மளிகை பொருட்களை தக்கோலம் முதல் நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ச, கணேசன் தலைமையில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது,  இதில் தக்கோலம் முதல் நிலை பேரூராட்சி ஊழியர்கள் கலந்துக் கொண்டு பயன் அடைந்தார்கள்